Home> World
Advertisement

சீனாவில் ஜி ஜிங்க்பிங்குக்கு வலுக்கும் எதிர்ப்பு! 14 லட்சம் பேர் கைது!

Xi Jinping Coronation: சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங்கின் மூன்றாவது முறையாக பதவியேற்பதற்கு எதிர்ப்புகள் வலுக்கின்றன. 'சர்வாதிகாரியை அகற்று' என்ற கோஷங்கள் விண்ணை முட்டும் நிலையில் இதுவரை 14 லட்சம் கைது செய்யப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் ஜி ஜிங்க்பிங்குக்கு வலுக்கும் எதிர்ப்பு! 14 லட்சம் பேர் கைது!

பெய்ஜிங்: சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங்கின் மூன்றாவது முறையாக பதவியேற்பதற்கு எதிர்ப்புகள் வலுக்கின்றன. 'சர்வாதிகாரியை அகற்று' என்ற கோஷங்கள் விண்ணை முட்டும் நிலையில் இதுவரை 14 லட்சம் கைது செய்யப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவில் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே அவருக்கு எதிராக அசாதாரண ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன. தலைநகர் பெய்ஜிங்கில் பல இடங்களில் ஜின்பிங்கிற்கு எதிராக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

அடுத்த அதிபர் தேர்வுக்கான CPC பொதுக்கூட்டம் பெய்ஜிங்கில் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக மகுடம் சூடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த முக்கியமான கூட்டத்தை முன்னிட்டு சீனாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய காங்கிரஸின் கூட்டத்தில் ஜி ஜின்பிங்கிற்கு பதவு நீட்டிப்பு கொடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி சாலையில் பல பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது, ஆளும் கட்சியின் தலைவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. பேனர்களை வைத்தவர்களை சீன போலீசார் தேடி வருகின்றனர்.ஆனால் இதுவரை அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் படிக்க | விளையாட்டிலும் மனிதனை விஞ்சும் ரோபோ! கூடைப்பந்து விளையாட்டில் Robot கின்னஸ் சாதனை

பெய்ஜிங்கில் ஜின்பிங்கிற்கு எதிரான பேனர்கள் 

 சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்திற்கு முன்னதாக பெய்ஜிங்கின் ஹைடியன் மாவட்டத்தின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதில், சாலை மேம்பாலத்தில் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பேனர் தொங்கவிடப்பட்டுள்ளது. மாண்டரின் மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த பேனரில், ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என்றும், அவருக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எங்களுக்கு சீர்திருத்தம் தேவை, கலாச்சார புரட்சி அல்ல. நாம் கொரோனா பரிசோதனை செய்யாமல் சாப்பிட வேண்டும் என்பதே முக்கியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் 1949 முதல் கம்யூனிஸ்ட் ஆட்சி
பெய்ஜிங்கில் உள்ள Zhongguacun பல்கலைக்கழக பகுதியிலும் இதேபோன்ற பேனர் வைக்கப்பட்டுள்ளது. 1949 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் புரட்சிக்குப் பின்னர் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்நாட்டில் ஜனநாயகம் இல்லை. ஒருவர் இரு முறை மட்டுமே அதாவது, 5-5 ஆண்டுகள் என மொத்தம் பத்து ஆண்டுகள் மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியும் என்று அதிகபட்ச வரம்பு நடைமுறையில் இருந்தது.

ஆனால் ஜி ஜின்பிங்கின் சமிக்ஞையின் பேரில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த கூட்டத்தில் அந்த நிபந்தனையை நீக்கியது. இதன் காரணமாக ஜி ஜின்பிங் இந்த பதவியில் வாழ்நாள் முழுவதும் நீடிக்க இப்போது வழி கிடைத்துள்ளது. ஜூன் மாதம் முதல் இதுவரை 14 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | சாண்டி ஹூக் துப்பாக்கிச் சூடு போலி செய்தி வெளியிட்டவருக்கு $965 மில்லியன் அபராதம்

ஜி ஜின்பிங், மூன்றாவதாக பதவி ஏற்கும் நேரத்தில், தனக்கு எதிர்ப்புகள் வரக்கூடாது என்று நினைத்ததால், ஜூன் மாதம் முதலே சிறப்பு பிரச்சாரத்தை தொடங்கி, அதிருப்தியாளர்களை கைது செய்யும் பணி துவங்கியது. இதுவரை 14 லட்சத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருந்த போதிலும், சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் ஜின்பிங்கிற்கு எதிராக பதாகைகள் நிறுவப்பட்டது, CPC க்கு எதிரான போராட்டத்தின் வேர்கள் எவ்வளவு ஆழமாக உள்ளன என்பதைக் காட்டுகிறது.

தலைநகரில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

நிலைமையை கட்டுப்படுத்த, சீன அரசு பெய்ஜிங்கை, இரும்புக் கோட்டையாக மாற்றியுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் பெய்ஜிங்கிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். பெய்ஜிங்கிற்கு வரும் ஒவ்வொரு நபரும் கட்டாயமாக பரிசோதிக்கப்படுகிறார்கள். ரயிலில் பயணிப்பவர்கள் திரவங்கள் எதையும் வைத்திருக்கமுடியாது.

திரவத்துடன் பயணிப்பவர்கள், தங்களிடம் இருக்கும் திரவத்தை குடிக்க வேண்டும் என பாதுகாப்பு அதிகாரிகள் கட்டாயப்படுத்தி குடிக்க வைப்பதாக கூறப்படுகிறது. கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றி ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மெக்காவின் மசூதியை விரிவுபடுத்த 53 பில்லியன் டாலர்கள் செலவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More