Home> World
Advertisement

மீளாவனம்!! இந்த காட்டுக்குள் போனால் திரும்பி வரவே முடியாது

வனம் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.... ஆனால் மீளாவனம் பற்றி கேள்விப்பட்டதுண்டா? மிகவும் மர்மம் நிறைந்த காட்டுக்குள் போன யாரும் திரும்பி வந்ததில்லை...  

மீளாவனம்!! இந்த காட்டுக்குள் போனால் திரும்பி வரவே முடியாது

பல விசித்திரமான மற்றும் மர்மமான விஷயங்களால் நிறைந்துள்ளது நாம் வாழும் பூமி. விஞ்ஞானிகளின் பல கண்டுபிடிப்பு செய்திகள் மற்றும் அற்புத கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், பல மர்மங்கள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன.

இதேபோல், உலகில் மக்கள் செல்வதற்கோ அல்லது தங்கவோ பயப்படும் பல பயங்கரமான இடங்கள் உள்ளன. அதில் ருமேனியாவின் ஹோயா பேசியு காடு மிகவும் முக்கியமானது.  

டிரான்சில்வேனியாவில் இதுபோன்ற பல விசித்திரமான சம்பவங்கள் நடந்துள்ளன, மக்கள் இங்கு செல்ல பயப்படுகிறார்கள். 'ஹோயா பாஸ்யூ', உலகின் மிகவும் அச்சமூட்டும் காடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, இது ட்ரான்சில்வேனியா மாகாணத்தில் க்ளூஜ் கவுண்டியில் அமைந்துள்ளது. காட்டில் நடக்கும் மர்மமான நிகழ்வுகளைப் பார்த்தால், இது 'டிரான்சில்வேனியாவின் பெர்முடா முக்கோணம்' (Triangle of Transylvania) என்று அழைக்கப்படுகிறது.

தி இன்டிபென்டன்ட் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, ஹோயா பாசு உலகின் மிகவும் மர்மம் நிறைந்த காடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கு பெர்முடா முக்கோணம் மற்றும் டிரான்சில்வேனியா முக்கோணம் போன்ற பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

Read Also | UFO, வேற்று கிரக வாசிகள் குறித்து அமெரிக்கா கூறுவது என்ன

இந்த காட்டில் உள்ள மரங்கள் கிடைமட்டமாகவும் வளைந்ததாகவும் இருக்கின்றன, அவற்றின் மீது சூரிய ஒளி பட்டாலும் கூட அவை பார்ப்பதற்கே மிகவும் அச்சமூட்டுவதாக இருக்கும்.
 
இது உலகின் மிக பயங்கரமான மற்றும் மர்மமான காடு, உள்ளே சென்ற யாரும் திரும்பதே இலையாம். ருமேனியாவில் உள்ள ஹோயா பேசியு (HOIA BACIU)  காடு மர்மங்கள் நிறைந்த காடு. இங்கு சென்ற யாரும் திரும்பாததற்கு காரணம் என்ன? இந்தக் காட்டில் பறக்கும் தட்டு (UFO) மற்றும் பேய்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்தப் பகுதியில் கால்நடை மேய்க்கும் ஒருவர் காணாமல் போனபோது இந்த வனம் தொடர்பான விஷயங்களின் மக்களின் ஆர்வம் அதிகரித்தது. இந்த வனப்பகுதியில் மர்ம்மான விஷயங்கள் இருப்பதாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

பல நூற்றாண்டுகளாக இதுபோன்ற விஷயங்கள் இந்தப் பகுதியில் நடைபெற்று வருகின்றன. கால்நடை மேய்ப்பவர் காணாமல் போனபோது, அந்தக் காட்டுப் பகுதிக்குள் மேய்ப்பன் காணாமல் போனபோது அவருடன் 200 ஆடுகளும் இருந்தன. அவற்றில் ஒன்று கூட திரும்பி வரவில்லை. இன்றும் கூட, வனப்பகுதிக்குள் செல்வது பற்றியும், காட்டின் மர்மங்கள் பற்றியும் பேசுவதற்கு மக்கள் ஆர்வம் காட்டினாலும், இங்கு செல்ல பயப்படுகிறார்கள்.

Also Read | வேற்று கிரக வாசிகள் பூமியை அப்பளம் போல் அடித்து நொறுக்கி விடுவார்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More