Home> World
Advertisement

Air Force One விமானத்தில் ஏறுகையில், மூன்று முறை இடறி விழுந்தார் Joe Biden

அமெரிக்க அதிபர் அட்லாண்டாவுக்கு விமானத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நேரிட்டுள்ளது. அங்கு இந்த வார தொடக்கத்தில் ஒரு பார்லரில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஆசிய-அமெரிக்க சமூகத் தலைவர்களை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Air Force One விமானத்தில் ஏறுகையில், மூன்று முறை இடறி விழுந்தார் Joe Biden

வாஷிங்டன்: வெள்ளிக்கிழமை (மார்ச் 19) Air Force One என்ற விமானப்படை விமானத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (US president  Joe Biden) ஏறுகையில், படிக்கட்ட்டில் மூன்று முறை கால் இடறி விழுந்தார். விமானத்தில் ஏறும் போது இடறி விழுந்த சம்பவத்திற்கு பின்னர் அமெரிக்க அதிபர்  உடல் நிலை நன்றாக இருக்கிறது என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை துறை செயலாளர் கரைன் ஜீன்-பியர்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) அட்லாண்டாவுக்கு விமானத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நேரிட்டுள்ளது. அங்கு இந்த வார தொடக்கத்தில் ஒரு பார்லரில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஆசிய-அமெரிக்க சமூகத் தலைவர்களை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

78 வயதான அதிபர் மூன்றாவது முறை இடறி விழும் வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவில் பிடன் மிக அவசரமாக படிக்கட்டுகளில் ஏறுவதைக் காணலாம். பிடென் எழுந்து நிற்க முயற்சிக்கும்போது இடறி விழுவதையும், பின்னர் எழுந்து முழங்காலில் படிந்த தூசியை தட்டிக் கொண்ட பின் மீண்டும் படி ஏறுவதையும் அந்த வீடியோவில் காணலாம்.

ALSO READ | அன்னை சீதா சிறைவைக்கப்பட்ட அசோகவனத்தில் இருந்து அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் கல் 

பின்னர் அமெரிக்க அதிபர் ஏர் ஃபோர்ஸ் ஒன் (Air Force One) விமானத்தின் கேபினுக்குள் செல்வதற்கு முன் பார்வையாளர்களுக்கு ஒரு வணக்கம் செலுத்தினார். பத்திரிகை செயலாளர் கரைன் ஜீன்-பியர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சம்பவத்திற்குப் பிறகுஅதிபர் "நன்றாக இருக்கிறார்" என்று தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ | அசத்தலான வீடுகள் ₹100 விலையில்... .ஆனாலும் வாங்க ஆளில்லை...!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More