Home> World
Advertisement

Watch: மீண்டும் மிதக்க தொடங்கியது சூயஸ் கால்வாயில் சிக்கிய Ever green கப்பல்

மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயல் கால்வாய் 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்டது. 

Watch: மீண்டும் மிதக்க தொடங்கியது சூயஸ் கால்வாயில் சிக்கிய Ever green கப்பல்

ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக இருக்கும் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் (Suez Canal)  குறுக்கே தரைதட்டி நிற்கும் எவர் கிரீன் (Ever green) என்னும் பிரம்மாண்டமான  சரக்கு கப்பலை மீண்டும் மிதக்க வைக்க,  மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனளித்துள்ளது. 

கடந்த 23ம் தேதி முதல் 6 நாட்களாக, கடலில் ட்ராபிக் ஜாமை ஏற்படுத்திய பிரம்மாண்டமான சரக்கு கப்பல் மீண்டும் சிறிது மிதக்க தொடங்கியுள்ளது. 

தினமும் 900 கோடி டாலர் மதிப்பிலான வர்த்தக போக்குவரத்து நடைபெறுகிறது.

மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயல் கால்வாய் 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்டது. 

சூயஸ் கால்வாயில் (Suez Canal) சிக்கியுள்ள கப்பலால் எற்பட்டுள்ள சிக்கலான நிலைமையால் ஏராளமான கப்பல்கள் கேப் ஆஃப் குட் ஹோப் வழியாக போக வேண்டிய நிலைமை  ஏற்பட்டது. 

பிரம்மாண்டமான கப்பலான எவர் கிரீன், சீனாவிலிருந்து (China) நூற்றுக்கணக்கான கன்டெய்னர்களுடன் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நோக்கி புறப்பட்டது. மலேசியா வழியாக வந்த எவர் கிரீன் கப்பல் 22-ம் தேதி எகிப்திலுள்ள சூயஸ் கால்வாயை வந்தடைந்தது. மார்ச் 23-ம் தேதி திடீரென ஆவேசத்துடன் வீசிய சூறாவளி காற்றினால்,  கட்டுபாட்டை இழந்த கப்பல் காலவாயின் குறுக்கே நகர முடியாமல் சிக்கிக் கொண்டது. 

சூயஸ் கால்வாயின் குறுக்கே கப்பல் சிக்கிக் கொண்டதற்கு  சூறாவளி புயல் காரணம் என கூறப்பட்டு வந்த நிலையில்,  வானிலை முக்கியக் காரணமல்ல என்று இப்போது கப்பல் அதிகாரிகள் கூறுகின்றனர்.

தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது மனித தவறு காரணமாக நடந்து இருக்கலாம் என்றும் இது கூறித்து முழுமையாக விசாரணை நடத்திய பின் உண்மையான  காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல இழுவைப் படகுகள் மூலம் கால்வாயின் நடுவே சிக்கியுள்ள கப்பலை திருப்பும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.  

ALSO READ | சூயஸ் கால்வாயில் நீடிக்கும் டிராபிக் ஜாம்; நெருக்கடியில் உலக வர்த்தகம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More