Home> World
Advertisement

அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்குக் கட்டுப்பாடு : செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்

US Gun control bill : அமெரிக்காவில் துப்பாக்கி பயன்படுத்துவதற்குக் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கும் மசோதா செனட் சபையில் நிறைவேறியது.  

அமெரிக்காவில் துப்பாக்கிகளுக்குக் கட்டுப்பாடு : செனட் சபையில் மசோதா நிறைவேற்றம்

அமெரிக்காவில் தனிநபர் துப்பாக்கி வைத்திருக்க அனுமதி உள்ள நிலையில், அங்கு அண்மையில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் துப்பாக்கி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது. அதே சமயம் துப்பாக்கி வைத்திருப்பது தனி நபரின் உரிமை என்ற கருத்தும் ஒருபுறம் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருக்க கூடுதல் கட்டுப்பாடு விதிக்கும் மசோதா, செனட் சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 64 வாக்குகளும், எதிராக 34 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து மசோதா நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க | அமெரிக்காவில் தொடர்கதையாகும் துப்பாக்கிச் சூடு; சிகாகோவில் 5 பேர் பலி; 16 பேர் காயம்

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 14 குடியரசுக் கட்சி செனட்டர்கள் வாக்களித்தனர். இதனையடுத்து மசோதா வார இறுதியில் இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு விடப்படும். இந்த மசோதா நிறைவேறினால் 21 வயதுக்கு குறைவான வாங்குபவர்களுக்கு கடுமையான பின்னணி சோதனைகள் கொண்டு வரப்படும். 

நேஷனல் ரைஃப் அசோசியேஷன் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 1994-ம் ஆண்டு துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் மூலம் அதிகத் திறன் கொண்ட துப்பாக்கிகளைப் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இச்சட்டம் காலாவதியானது. அதன்பிறகு தற்போதுதான் முதன்முறையாக துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டம் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி செனட்டர்களிடமிருந்து இந்த அளவு ஆதரவைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நியூயார்க்கில் புதிய சட்டம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More