Home> World
Advertisement

US Elections: வன்முறை வெடிக்கும் அச்சத்தில் சொத்துகளை பாதுகாக்கும் முயற்சியில் அமெரிக்கா!!

அமெரிக்கத் தேர்தல்களுக்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், தேர்தல்களுக்குப் பிறகு அமைதியின்மை மற்றும் வன்முறை ஏற்படக்கூடும் என்ற பரவலான அச்சம் அனைவரிடமும் உள்ளது.

US Elections: வன்முறை வெடிக்கும் அச்சத்தில் சொத்துகளை பாதுகாக்கும் முயற்சியில் அமெரிக்கா!!

அமெரிக்கத் தேர்தல்களுக்கு (American Elections) இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், தேர்தல்களுக்குப் பிறகு அமைதியின்மை மற்றும் வன்முறை ஏற்படக்கூடும் என்ற பரவலான அச்சம் அனைவரிடமும் உள்ளது. நாட்டில் வணிக மற்றும் சொத்து உரிமையாளர்களுக்கு மத்தியில் தூக்கமில்லாத இரவுகளும் பதட்டமான மன நிலையும் உள்ளது. வன்முறைகளால் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க உரிமையாளர்கள் இப்போது தங்கள் கடைகளைப் பாதுகாப்பதில் மும்முரமாக உள்ளனர்.

வார இறுதி முழுவதும், நாடு முழுவதும் தொழிலாளர்கள் நியூயார்க், வாஷிங்டன் டி.சி. (Washington) மற்றும் பிற முக்கிய நகரங்களில் கடைகள், வணிக அலுவலகங்கள், உணவகங்கள், வங்கிகள், சலூன்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை அதிகரிப்பதில் ஈடுபட்டிருந்தனர். இவை திறந்திருந்தால், திருட்டுகள் எற்படவும், காழ்ப்புணர்ச்சி காரணமாக சேதங்கள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன என அனவருக்கும் அச்சம் உள்ளது.

மற்ற இடங்களில், கடை ஜன்னல்கள் மற்றும் கதவுகளைப் பாதுகாப்பதற்காக மர பலகைகள் நிறுவப்பட்டன. பல கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பு நிறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முக்கிய இடங்களில் போலீசார் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

‘தேர்தலின் முடிவுகள் வந்தவுடன் ஒரு குழுவுக்கு மகிழ்ச்சியும் ஒரு பிரிவுக்கு வருத்தமும் இருக்கும் என்பது இயல்பான விஷயம்தான். ஆனால், எந்த பிரிவிலும் சேராத சிலர், இந்த சூழலை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, திருட்டு, வன்முறை ஆகியவற்ரில் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளது” என்று கார்டியன் ஏஞ்சல்ஸ் நிறுவனர் கர்டிஸ் ஸ்லிவா WABC-TV இடம் கூறினார்.

ALSO READ: டிரம்பின் தேர்தல் பேரணிகளில் கலந்துக் கொண்ட 700 பேர் பலி அதிர்ச்சித் தகவல்!

வாஷிங்டனில், ஹோட்டல்கள், அலுவலக கட்டிடங்கள், காபி கடைகள் மற்றும் உணவகங்கள் அனைத்தும் ஒட்டு பலகைகளால் மூடப்பட்டிருந்தன. சில தற்காலிக தடைகள் கிட்டத்தட்ட முழு பகுதியையும் மூடி விட்டன.

இதற்கிடையில், வாஷிங்டன் போலீசார் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் வெள்ளை மாளிகையைச் சுற்றி ஒரு பெரிய சுற்றளவில் தெருக்களை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளனர். ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மாணவர் விவகார ஊழியர்களும் அமைதியின்மை ஏற்பட்டால் சமாளிக்க அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைக்குமாறு மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு வாக்கெடுப்பில், 4 வாக்காளர்களில் மூன்று பேர் வன்முறை குறித்து கவலைப்படுவதாக தெரிய வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர், மினியாபோலிஸ் போலீசின் நடவடிக்கையால் ஜார்ஜ் ஃபிலாய்ட் என்ற நபர் இறந்ததைத் தொடர்ந்து நடந்த போராட்டங்களின் போது வெடித்த வன்முறை, கொள்ளை மற்றும் காழ்ப்புணர்ச்சியின் பின்னணியில் இந்த அச்சங்கள் இன்னும் அதிகரித்துள்ளன. 

ALSO READ: US Presidential election 2020 Iowa state poll: ஏறுமுகத்தில் டொனால்ட் டிரம்ப்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More