Home> World
Advertisement

எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்த ட்விட்டர் நிறுவனம்! காரணம் இதான்

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனம் வாங்குவதை கைவிட்டுவிட்டதால் அவர் மீது ட்விட்டர் நிர்வாகம் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது.  

எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்த ட்விட்டர் நிறுவனம்! காரணம் இதான்

உலக பணக்காரர்களில் ஒருவரான  எலான் மஸ்க் சில மாதங்களுக்கு முன்னர் ட்விட்டர் நிறுவனத்தை $44 பில்லியனுக்கு வாங்க இருப்பதாக அறிவித்து இருந்தார், இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.  ஆனால் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த முழு விவரங்களை அறிந்த பின்னரே இந்நிறுவனத்தை தான் வாங்கப்போவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று எலான் மஸ்க், $44 பில்லியனுக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியை கைவிடுவதாகவும், போலி கணக்குகள் குறித்த தகவலை ட்விட்டர் நிறுவனம் கொடுக்க தவறவிட்டது என்றும் கூறியிருந்தார்.

fallbacks

மேலும் படிக்க | Ban TikTok: இரு சிறுமிகளின் உயிரைப் பறித்த டிக்டாக்கின் பிளாக்அவுட் சேலஞ்ச்

இதனால்  எலான் மஸ்க் பிரேக்கப் ப்ரீ கட்டணமாக $1 பில்லியன் செலுத்த வேண்டும் என்றும், அவர் மீது வழக்கு தொடர இருப்பதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதற்கெதிராக எலான் மஸ்கின் வழக்கறிஞர் கூறுகையில், எலான் மஸ்க் கடந்த இரண்டு மாதங்களாக போலி அல்லது ஸ்பேம் கணக்கில் பற்றிய விவரங்களை அளிக்குமாறு நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டே இருந்தார். ஆனால் அவர்கள் அதற்கு பதிலளிக்கவில்லை, சில சமயங்களில் மஸ்கின் கோரிக்கையை கூட சில காரணங்களால் புறக்கணித்துவிட்டனர் என்று கடிதம் வாயிலாக கூறியுள்ளார்.

fallbacks

கடந்த வெள்ளிக்கிழமை ட்விட்டரின் பங்குகள் 5% சரிந்து $36.81 ஆக இருந்தது, இது மஸ்க் செலுத்த ஒப்புக்கொண்ட $54.20க்குக் கீழே ஆகும்.  இதற்கிடையில், டெஸ்லாவின் பங்குகள் 2.5% உயர்ந்து $752.29 ஆக இருந்தது.  ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்துவர, டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்தது.  இது ட்விட்டர் மற்றும் அதன் குழுவிற்கு ஒரு பேரழிவு என்று ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; சீனாவின் 'Sail' குப்பைகளை அகற்றுமா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More