Home> World
Advertisement

வடகொரியாவிடம் நட்பு நாடும் ட்ரம்ப்!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நாளை 15-வது ‘ஆசியான்’ மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.

வடகொரியாவிடம் நட்பு நாடும் ட்ரம்ப்!

பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நாளை 15-வது ‘ஆசியான்’ மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பிலிப்பைன்ஸ் சென்றடைந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக வடகெரியா அதிபர் கிம் குறித்தும் ட்விட்டர் பதிவு ஒன்றினை அவர் பதிவிட்டுள்ளார் அப்பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;

’அதிபர் கிம் என்னை கிழடு என தொடர்ந்து கூறி கிண்டல் செய்து வருகின்றார். பதிலுக்கு நான் அவரை குட்டையான மற்றும் குண்டான நபர் என ஒருநாளும் கூறாத நிலையில் அவர் இப்படி கூறி என்னை புண்படுத்துவது வருத்தம் அளிக்கின்றது.

மேலும் நான் அவருடைய நண்பராக கடும் முயற்சி செய்கிறேன். ஒருநாள் அது சாத்தியப்படும்’ எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

எலியும், பூனையுமாக இருக்கும் அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிபர்களுக்கு இடையில் இத்தகு வேடிக்கை நிரைந்த வார்த்தைச் சண்டை நடைப்பெற்று வருவது உலக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது!

Read More