Home> World
Advertisement

தீபாவளியை கொண்டாட தயாராகும் தைவான்.. கடுப்பாகும் சீனா..!!!

தீபாவளி திருநாளை கொண்டாட, தைவான் அரசும், தைவானில் இந்தியா இசை மற்றும் கலாச்சார மையமும்  ஏற்பாடுகளை செய்து வருகிறது

தீபாவளியை கொண்டாட தயாராகும் தைவான்.. கடுப்பாகும் சீனா..!!!

புதுடெல்லி: இந்த ஆண்டு, தைவானில் இந்துக்களின் மிகப்பெரிய பண்டிகையான தீபாவளி ஒரு பெரிய விழாவாக இருக்கப்போகிறது. மெகா தீபாவளி கொண்டாட்டத்தை தைவான் நடத்த உள்ளது. இதை தைவான் அரசு நடத்துகிறது. பிரமாண்ட விழாவின் கொண்டாட்டம் நாட்டின் தலைநகர் தாய்பேயில் இருக்கும்.

மெகா திருவிழாவை தாய்பேய் இந்தியா இசை மற்றும் கலாச்சார மையம் மற்றும் தைவானை தளமாகக் கொண்ட இந்திய குழு ஏற்பாடு செய்யும். இந்த விழாவில் தைவானின் (Taiwan) துணை வெளியுறவு அமைச்சர் டி.என்.சுங் குவாங் கலந்து கொள்வார்.

சமீபத்தில், சீன (China) எல்லையில் உள்ள பதற்றத்திற்கு மத்தியில் இந்தியாவுக்கும் தைவானுக்கும் இடையிலான சமூக உறவுகள் மேலும் வலுவடைந்துள்ளன. இந்த முறை தைவானின் தேசிய தினம் இந்தியாவில் மிகுந்த ஆடம்பரமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவில் தைவான் தேசிய தினத்தின் போது, எல்லா இடங்களிலும் சுவரொட்டிகள் போடப்பட்டன. மேலும் தைவான் தினம் பற்றி சமூக ஊடகங்களில் மிகவும் அதிகமாக பேசப்பட்டது. இதற்காக,  ட்வீட் மூலம் தைவான் அதிபர் இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க | மர்மமான வடகொரிய அதிபரை போல், மர்மம் நிறைந்த வட கொரியா ஹோட்டல்..!!!

சமீபத்தில், தைவான் அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-wen) இந்திய உணவு வகைகள் குறித்து ஒரு ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார். இந்த ட்வீட்டில், இங்-வென் தனக்கு பிடித்த உணவு சனா மசாலா மற்றும் நான் என்று எழுதினார். இங்-வென் "ஒரு துடிப்பான, மாறுபட்ட மற்றும் வண்ணமயமான ஒரு நாட்டில் பயணம் செய்த  நினைவுகள்" என்று விவரித்து இந்தியாவுக்கு மேற்கொண்ட  தனது பயணத்தையும் அவர் நினைவு கூர்ந்தார். இதன் மூலம் இந்தியாவுக்கும் தைவானுக்கும் இடையிலான ஆழமான உறவை புரிந்து கொள்ளலாம்.

தைவான் மற்றும் இந்தியா மீது சீனா  ஆக்கிரமிப்பு அணுகுமுறையை கடைப்பிடிப்பதால், இரு நாடுகளுக்கு பொதுவான எதிரியாக சீனா உள்ளது.  எனவே இந்தியா தைவான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான சமூக உறவுகள் தொடர்ந்து வலுவடைந்து வருகின்றன்.

குறிப்பிடத்தக்க வகையில், எல்.ஐ.சி-யில் (LAC) இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பல மாதங்களாக பதற்றம் நிலவி வருகிறது. மறுபுறம், சீனாவும் தைவான் சீனாவின் ஒரு பகுதி என கூறி வருகிறது. தைவானை தனி நாடு என கூறக் கூடாது என இந்திய ஊடகவியலாளர்களை சீனா அச்சுறுத்தியது.

மேலும் படிக்க | Facebook போலி கணக்குகள் மீது கடும் நடவடிக்கை... நீக்கப்பட்ட பல போலி கணக்குகள்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More