Home> World
Advertisement

லிஃப்டில் 3 நாட்கள் சிக்கிய பெண்... என்ன நடந்தது?

லிஃப்ட் இல் சிக்கிய பெண் ஒருவர் 3 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்த முழு விவரத்தையும் இதில் பார்க்கலாம்.

லிஃப்டில் 3 நாட்கள் சிக்கிய பெண்... என்ன நடந்தது?

உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் 32 வயதான ஓல்கா  லியோன்டியோவா. இவர் தபால் விநியோகம் செய்யும் வேலையை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 24ஆம் தேதி அன்று தாஷ்கண்டில் உள்ள ஒன்பது மாடியில் கொண்ட கட்டிடத்திற்கு  வழக்கம்போல  தபால்  விநியோகம் செய்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது ஓல்கா லிஃப்ட் பழுதடைவதற்கு சில வினாடிகளுக்கு முன் டெலிவரி செய்வதற்கான கடிதங்களோடு லிப்டில் நுழைந்துள்ளார். அவர் லிப்டில் ஏறிய உடனே மின்சாரம் தடைப்பட்டுள்ளது. பின்னர் தன்னை காப்பாற்றுங்கள் என அந்தப் பெண் பலமுறை கூச்சலிட்டுள்ளார். ஆனால் துரதிஷ்டவசமாக அது யாருக்கும் கேட்கவில்லை.

இதற்குள் ஓல்கா வீட்டில் இருந்தவர்கள் வேலை முடிந்து அவர் இன்னும் வீடு திரும்பவில்லையே என்று கவலை அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் காவல் நிலையத்திற்கு சென்று ஓல்காவை காணவில்லை என்று புகார் செய்துள்ளனர். பின்னர் மூன்று நாட்களாக தேடுதல் வேட்டை தொடர்ந்துள்ளது. பின்னர் கடைசியாக ஜூலை 27 ஆம் தேதி தீவிர தேடுதலுக்கு பிறகு அவரது உடல் லிஃப்ட் க்குள் கிடைத்துள்ளது.

மேலும் படிக்க | ஆத்தாடி... ஒரு பெண்ணுக்கு 1,41,078 ஆண்டுகள் சிறை தண்டனை - அப்படி என்ன தவறு செய்தார்?

இது பற்றி கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ள வழக்கறிஞர் அலுவலகம் மாநில புலனாய்வாளர்கள் சம்பவத்தின் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் முதல்கட்ட விசாரணையில் மின்வெட்டால் லிப்ட் நின்றதால் அலாரம் சிஸ்டம் வேலை செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால்தான்  ஓல்காவால் உதவிக்கு யாரையும் அழைக்க முடியவில்லை என்று கூறி உள்ளனர். ஆனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை மின்வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது

சீனாவில் தயாரிக்கப்பட்ட இந்த லீஃப்ட் அந்த நேரத்தில் செயல் இழந்தது தான் விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும்  முறையாக அரசாங்கத்தின் விதிகள் படி பதிவு செய்யப்படாமல் இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 இது போன்ற சம்பவம் கடந்த வாரமும் நடந்துள்ளது இத்தாலியின் பலேர்மோவில்  என்ற பகுதியில் 61 வயது பெண் ஒருவர் மின்தடையின் போது லிப்டில் இரண்டு தளங்களுக்கு இடையே சிக்கி உயிர் இழந்தார்.லிஃப்ட் மரணங்கள் என்பது உலகம் முழுவதும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க | சாகும் முன் இன்ஸ்டா பிரபலம் பாலோ செய்த டயட் என்ன? ஷாக்கான மருத்துவர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More