Home> World
Advertisement

மர்மமான முறையில் சியோல் மேயரின் மரணம்: அதிர்ச்சியில் மகளும் மக்களும்

நீண்டகாலமாக சியோல் நகர மேயராக இருந்த பார்க் வான்-சூன் மர்மமான விதத்தில் இறந்ததாக போலிசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

மர்மமான முறையில் சியோல் மேயரின் மரணம்: அதிர்ச்சியில் மகளும் மக்களும்

நீண்டகாலமாக சியோல் (Seoul) நகர மேயராக (Mayor) இருந்த பார்க் வான்-சூன் (Park Won-soon) மர்மமான விதத்தில் இறந்ததாக போலிசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். மேயரின் உடல் வடக்கு சியோலில் உள்ள மவுண்ட் புகாக்கில் நள்ளிரவில் கண்டறியப்பட்டது. அவரது ஃபோனின் சிக்னல் கடைசியாக கிடைத்த இடமும் இதுவே ஆகும் என்று சியோல் பெருநகர காவல் அமைப்பு தெரிவித்துள்ளது.

நிறுவனம் மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. மாலை 5:17 மணியளவில் அவரைக் காணவில்லை என்று அவரது மகள் (Daughter) தெரிவித்தார். அவரது ஃபோன் ஆஃப்பாக உள்ளதாகவும், ‘லைக் எ வில்’ (Like a Will) என அவர் ஒரு செய்தியை (Message) அனுப்பியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேயரைத் தேடும் பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் பங்கேற்றனர். பார்க்கால் பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக அவரது முன்னாள் செயலாளர் புதன்கிழமை புகார் அளித்ததாக யோன்ஹாப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் 10 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தின் மேயராக, பார்க் தென் கொரியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளில் ஒருவராக இருந்தார். மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் உயர் பங்கைக் கொண்டிருந்தார். 2022 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் அதிபர் (President) தேர்தலில் நம்பிக்கையூட்டும் ஒரு வேட்பாளராக அவர் காணப்பட்டார்.

ALSO READ: தீப்பிடித்து எரிந்த டிரம்பின் மனைவி மெலனியாவின் சிலை

சியோலின் மலை சார்ந்த, இயற்கை  அழகு நிறைந்த பகுதிகளில், பார்க்கிற்கான தேடுதல் இரவில் நீண்ட நேரம் நடைபெற்றது. ட்ரோன்கள், நாய்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொலிசார் இதில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை காலை 10:40 மணியளவில் (0140 GMT), ஒரு கருப்பு தொப்பி அணிந்துகொண்டு, ஒரு பையுடன் பார்க் மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து கிளம்பினார். திட்டமிடப்பட்டிருந்த அன்றைய கொள்கை கூட்டங்களை அவர் ரத்து செய்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு முக்கிய மனித உரிமை ஆர்வலராகவும்  வழக்கறிஞருமான பார்க், 2011 முதல் சியோலின் மேயராக இருந்து வந்தார். பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் கொள்கைகளை அவர் செயல்முறைபடுத்தினார். 1990 களில் ஒரு வழக்கறிஞராக, அவர் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான தென் கொரியாவின் ஒரு பிரபல வழக்கில் வெற்றி பெற்றார். இரண்டாம் உலகப் போருக்கு முன்னரும், போரின்போதும், ஜப்பான் கொரியாவை ஆக்கிரமித்தபோதும்,  ஜப்பானின் போர்க்கால இராணுவ விபச்சார விடுதிகளில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்த பெண்களுக்காக அவர் வாதிட்டார்.

2018 ஆம் ஆண்டில் #MeToo இயக்கத்தின் மத்தியில் தொடர்ச்சியாக அரசியல்வாதிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு எதிராக பெண்கள் குரல்களை எழுப்பியபோது பார்க் அதை ஆதரித்தார். 

 

Read More