Home> World
Advertisement

39 பேருடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்து

ரஷ்யாவின் ராணுவ விமானம் சைபீரியா பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் படுகாயமடைந்து உள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

39 பேருடன் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் விபத்து

மாஸ்கோ: ரஷ்யாவின் ராணுவ விமானம் சைபீரியா பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் படுகாயமடைந்து உள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

ரஷ்ய ராணுவ விமானங்களில் மிகவும் பழமையான II-18 ரக விமானம் இன்று அவசரமாக தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. 39 பேர் பயணம் செய்த அந்த விமானம், யாகுடியா பிராந்தியத்தில் உள்ள திக்சி நகரின் அருகே பறந்துகொண்டிருந்தபோது விமானத்தை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டதால் உடனடியாக தரையிறக்கப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக விமானம் தரையில் மோதியது. 

விமானத்தில் பயணம் செய்தவர்களில் 32 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 16 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 

மோசமான வானிலை காரணமாக இந்த் விபத்து ஏற்பட்டு உள்ளது. மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

Read More