Home> World
Advertisement

பிரிட்டன் பிரதமர் பதவி - இறுதிச்சுற்றில் ரிஷி சுனக் - லிஸ் டிரஸ்

UK PM Election : பிரிட்டன் பிரதமரைத் தேர்வு செய்வதற்கான தேர்தலின் 5-வது சுற்றிலும் ரிஷி சுனக் முன்னிலை பெற்றார். அவருக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ்ஸுக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.  

பிரிட்டன் பிரதமர் பதவி - இறுதிச்சுற்றில் ரிஷி சுனக் - லிஸ் டிரஸ்

இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கு ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கடந்த 7-ம் தேதி போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  இதனைத் தொடர்ந்து, புதிய பிரதமர் பதவிக்கு வர 8 எம்.பி.க்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு சுற்றுகளாக எம்.பி.க்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 

ஒவ்வொரு சுற்றிலும் குறைந்த வாக்குகளைப் பெறுபவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனார். இதுவரை நடைபெற்ற 4 சுற்று வாக்குப்பதிவிலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், முன்னாள் நிதியமைச்சருமான ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்தார்.

மேலும் படிக்க | பிரிட்டன் பிரதமர் யார்? செப்டம்பர் 5ம் தேதி வரை காத்திருக்கவும்

இதனைத் தொடர்ந்து, 5-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இதில், ரிஷி சுனக், வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ், வா்த்தகத் துறை அமைச்சா் பென்னி மாா்டன்ட் ஆகியோா் இடையே போட்டி நிலவியது. 
இதில் 137 வாக்குகள் பெற்று ரிஷி சுனக் முதலிடம் பிடித்தாா். லிஸ் டிரஸ் 113 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும், 105 வாக்குகளுடன் பென்னி மாா்டன்ட் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். கடைசி இடம் பிடித்த பென்னி மார்டன்ட் போட்டியிலிருந்து விலகப்பட்டாா்.

இறுதிப்போட்டியில், ரிஷி சுனக்கும், லிஸ் டிரஸ்ஸுக்கும் இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது. செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் இறுதி தேர்தலில், கட்சியின் ஒரு லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்கள் வாக்களித்து பிரதமரை தேர்வு செய்வார்கள். இதில், ரிஷி சுனக்-குக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க | பிரதமர் பதவியை ராஜினாமா செய்த உடனேயே 'வேலை தேடும்' போரிஸ் ஜான்சன்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More