Home> World
Advertisement

பெரு நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.3, பலி 4

பெரு நிலநடுக்கம்: ரிக்டர் அளவு 5.3, பலி 4

பெரு நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கைலோமா மாகாணத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் 

4 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால், கட்டிட இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி காலை 9.58 மணியளவில் நிலநடுக்கம் 

ஏற்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் மூலமாகவும் மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு பெருவில் 

பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.9-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

Read More