Home> World
Advertisement

நிழல் உலக தாதா தாவூத் இப்ரஹீமிற்கு டொமினிகா குடியுரிமை வழங்கப்பட்டதா..!!!

பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் நிதி உதவி அளிப்பதற்காக FATF விதிக்கும் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக, ஐ.நா.வில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாகிஸ்தான், தாவூத் இப்ராஹிம் தனது நாட்டில் தான் இருக்கிறார் என ஒப்புக்கொண்டது. 

நிழல் உலக தாதா தாவூத் இப்ரஹீமிற்கு  டொமினிகா குடியுரிமை வழங்கப்பட்டதா..!!!

நிழல் உலக தாதா மற்றும்  இந்தியாவினால் மிகவும் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம், கரீபியன் நாடான டொமினிகா  நாட்டின் குடியுரிமையைப் பெற்றுள்ளதாக வெளியான செய்திகளை அந்நாடு மறுத்துள்ளது. டொமினிகா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அதிகாரபூர்வ அறிக்கையில்,   தாவூத் இப்ராஹிம் தனது நாட்டின் குடிமகன் அல்ல என தெரிவித்தது.

நாட்டில் ஒரு குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக முதலீடு செய்பவர்களுக்கு குடியுரிமை வழங்கும் முறை உள்ளது என்று டொமினிகா அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குடியுரிமை வழங்குவதற்கு முன் முழுமையான விசாரணை செய்யப்படுகிறது என்றும், விண்ணப்பிப்பவர்கள் பல நிலைகளில் ஆராயப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளது.  தாவூத் இப்ராஹிமுக்கு இதுபோன்ற குடியுரிமை எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.

பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் நிதி உதவி அளிப்பதற்காக FATF விதிக்கும் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக, ஐ.நா.வில் சமீபத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பாகிஸ்தான், தாவூத் இப்ராஹிம் தனது நாட்டில் தான் இருக்கிறார் என ஒப்புக்கொண்டது. மேலும் தாவூத் இப்ராஹிமிடம் பல பாஸ்போர்ட்டுகள் உள்ளன என்றும் கூறியது . இந்த அறிக்கையின் பின்னர், தாவூத் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுத்து இந்தியாவுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்தது. 

ALSO READ | கத்திரிக்காய் முற்றியதும் கடைக்கு வந்தது... தாவூத் முகவரியை பாகிஸ்தான் வெளியிட்டது..!!!

தாவூத் இப்ரஹீம், 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரி. இந்த தாக்குதலில், 257 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 700 பேர் காயமடைந்தனர். மும்பை தாக்குதலுக்குப் பிறகு தாவூத் இப்ராஹிம் தப்பி பாகிஸ்தானில் ஒளிந்து கொண்டார். கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தான் இராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ.  பாதுகாப்புடன் அவர் அங்கு சுமாக வாழ்ந்து வருகிறார். தாவூத் இம்ராஹீம் பாகிஸ்தானில் தான் உள்ளார் என இந்தியா பல முறை கூறி வந்தது. ஆனால் பாகிஸ்தான் ஒவ்வொரு முறையும் அதை மறுத்தது.

ஆனால், இப்போது, FATF விதிக்கும் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக, தாவூத் இப்ரஹீம், பாகிஸ்தானில் உள்ளதை ஒப்புக் கொண்டு முகவரியையும் வெளியிட்டுள்ளது. 

ALSO READ | சீனாவின் எதிர்ப்பை மீறி தென் சீனக் கடலில் நிறுத்தப்பட்ட இந்திய போர்க்கப்பல்...!!!

Read More