Home> World
Advertisement

சமூக செயற்பாட்டாளர்களை அடக்க பாகிஸ்தான் செய்யும் சதிச் செயல், அதிர்ச்சித் தகவல்!

பலூசிஸ்தானில் இருந்து ஆயிரக்கணக்கான பலூச் தேசியவாத ஆர்வலர்கள் காணாமல் போயுள்ளனர். இது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவிய நிலையில் தற்போது அதற்கு காரணம் ரசாயன ஆயுதங்களா என்ற அதிர்ச்சிக் கேள்வி சர்வதேச அளவில் முன்வைக்கப்படுகிறது...

சமூக செயற்பாட்டாளர்களை அடக்க பாகிஸ்தான் செய்யும் சதிச் செயல், அதிர்ச்சித் தகவல்!

புதுடெல்லி: பாகிஸ்தான் நீண்ட காலமாக போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைகளில் ஈடுபட்டுள்ளது, ஆனால் பலூசிஸ்தான் மற்றும் சிந்த் மாகாணங்களில் அண்மைக் காலங்களில் நடைபெறும்  காட்டுமிராண்டித்தனமான போக்கும்,   மனிதாபிமானமற்ற தன்மையும் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.  

சிந்த் மாகாணத்தில் இருந்து நூற்றுக்கணக்கான சிந்தி மற்றும் உருது மொழி பேசும் உள்ளூர் இளம் தொழிலாளர்கள் பாகிஸ்தான் ஏஜென்சிகளால் கடத்தப்பட்டுள்ளனர். அங்கு பலர் பல ஆண்டுகளாக சித்திரவதை செய்யும் கொட்டடிகளில் வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல ராணுவத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உயிரிழந்த பலூச் ஆர்வலர்களின் சடலங்களையும் பாகிஸ்தான் ராணுவம் ஒப்படைக்கவில்லை. இது மனிதாபிமானம் அற்றது என்பதோடு, சர்வதேச யுத்த விதிகளை முழுமையாக மீறுவதாகும்.

பாகிஸ்தான் ராணுவத்தால் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக பலூச் தேசியத் தலைவர் டாக்டர் அல்லாஹ் நாசர் பலூச் (Allah Nazar Baloch) சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள் பாகிஸ்தானின் கோர முகத்தை தோலுரித்துக் காட்டுகிறது. "கொல்லப்பட்டவர்களின் சடலங்களை அவர்களது குடும்பங்களிடம் ஒப்படைக்காததால்,  பாகிஸ்தான் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது" என்று news intervention portalஇல் வெளியிட்டுள்ள அறிக்கையில் டாக்டர் நாசர் பலூச் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானின் இத்தகைய காட்டுமிராண்டித்தனத்தை சகித்துக் கொண்டு வாழ்வது பலூச் மக்களுக்கு மிகவும் துயரத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்துவதாக டாக்டர் நாசர் பலோச் கூறுகிறார்.

அண்டை நாட்டு செய்தி | பொருளாதார சிக்கலில் திண்டாடும் இலங்கையும், அங்கு வருகை தரும் சீன உயர்நிலைக் குழுவும்

கொல்லப்பட்டவர்களில் ஒருவரின் குடும்பத்தினர், தங்கள் வீடு பல முறை தீப்பிடித்ததாக கூறுகின்றனர். அதனால் அவர்கள் பல நாட்கள் வெட்டவெளியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கொல்லப்பட்ட இரண்டு பலூச் தேசியவாதிகளின் சடலங்கள் உறவினர்களுக்கு கிடைத்தாலும், பாகிஸ்தான் ராணுவத்தால் இழுத்துச் செல்லப்பட்டு முறையான இறுதி சடங்குகள் செய்யாமல் குழியில் வீசப்பட்டன. பாக்கிஸ்தான் ராணுவம் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரால் அடையாளம் காணாத சில சிமென்ட் கல்லறைகளைக் காட்டி, அதுதான் கொல்லப்பட்டவர்களின் கல்லறை என்று ஒப்புக் கொள்ளக் கட்டாயப்படுத்துகிறது.

பாகிஸ்தான் ராணுவத்திற்கு ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை சீனா வழங்கி வருவதாக அச்சங்கள் எழுந்துள்ளன. எவ்வாறாயினும், இந்த ஆயுதங்கள் முற்றிலும் இறுதி தயாரிப்புகளா அல்லது பரிசோதிப்பதற்காக பலூச் தேசியவாத ஆர்வலர்கள் மீது பயன்படுத்தப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை” என்று தகவலறிந்த வட்டாரங்கள் ஜீ நியூஸிடம் தெரிவித்தன.

பலூச் மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காக போராடும் போது, பாகிஸ்தான் ரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்களை நேர்மையற்ற முறையில் பயன்படுத்துவது மட்டுமல்ல, அவர்கள் பலவந்தமாக மக்கள் சீனாவிற்கு கடத்தப்படுகிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.  

பாகிஸ்தான் ராணுவத்தின் இத்தகைய அவதூறான, கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற   அட்டூழியங்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் சட்டமன்றத் தலைவர் டாக்டர் அப்துல்லா ஹைவாட், சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.  "தவறுகளை மன்னிப்பதில் தீர்வு இல்லை, பயங்கரவாதம் முற்றிலுமாக அழிக்கப்படும் வகையில் பாகிஸ்தானை வரைபடத்திலிருந்து அகற்றுவேண்டும்" என்று அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்தில் கொல்லப்பட்ட பலூச் தேசியவாத ஆர்வலர்களின் உறவினர்கள் பலூசிஸ்தானின் கெச் மாவட்டத்தில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், விடுத்த வேண்டுகோள் இது. ”சர்வதேச சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் மேற்பார்வையில் சடலங்களை பிரேத பரிசோதனை நடத்த வேண்டும்”. இந்த கோரிக்கை நிலைமையை தெளிவாக எடுத்துரைக்கிறது.  

பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தபோதிலும், 'இஸ்லாத்தின் மகிமை' என்ற விஷயத்திற்காக கூட "பேச்சு சுதந்திரம்" கட்டுப்படுத்தப்பட்டுள்ள நாடு. இஸ்லாமில் சடலங்களை எரிக்கும் வழக்கம் கிடையாது. ஆனால், பலூச் போராளிகளின் இறந்த உடல்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் பல மைல்கள் இழுத்துச் செல்லப்பட்டு, எரிக்கப்பட்டு, டிராக்டர்களால் குழி தோண்டப்பட்டு, அதில் கொட்டப்படுகிறது. இவை அனைத்தும் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை கண்டறியச் செய்யும் தடயங்களை மறைப்பதற்கான செயலாக பார்க்கப்படுகிறது. ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களின் அடிச்சுவடுகளை மறைக்க ராணுவமும் அழுத்தம் கொடுக்கலாம்.

சர்வதேச அமைப்புகளும் மனித உரிமை பாதுகாவலர்களும் பாக்கிஸ்தானின் கொடூரமான செயல்களுக்கு எதிராக உலகின் முன் வைப்பதற்கான நேரம் இது. அக்டோபரில் நடைபெறவிருக்கும் FATF கூட்டம் பாகிஸ்தானின் தலைவிதியை தீர்மானிக்கும். அந்த சமயத்தில்,   பாகிஸ்தான் அரசாங்கம் இத்தகைய கொடூரமான செயல்களைச் செய்வதற்கு செலவழித்த நிதி தொடர்பான விவகாரங்களும் பேசப்படுவதை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும்.

Read Also | Forbes India பணக்காரர்களின் பட்டியலில் 13வது ஆண்டாக முதலிடத்தில் முகேஷ் அம்பானி!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More