Home> World
Advertisement

மசூத் அசார் குடும்பத்துடன் காணவில்லை நாடகமாடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் இராணுவத்தின் காவலில் இருந்து ஜெயிஷ்-ஏ-மொஹம்மத்,, ஐ.நா.வால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள மசூத் அசார் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மசூத் அசார் குடும்பத்துடன் காணவில்லை நாடகமாடும் பாகிஸ்தான்

புது டெல்லி: பாரிஸில் FATF இன் முக்கிய ஆலோசனை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக மசோத் அசார் (Masood Azhar) மற்றும் அவரது குடும்பத்தினர் காணாமல் போயுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து தனது ட்வீட்டில், எம்ஓஎம் (Muttahida Qaumi Movement) நிறுவனர் அல்தாஃப் உசேன் தெரிவித்துள்ளார். அதாவது இந்த வாரம், பாரிஸ் நகரில் அமைந்துள்ள உலகளாவிய பயங்கரவாத நிதியுதவி கண்காணிப்புக் குழு (Financial Action Task Force), பயங்கரவாத நிதியுதவி தடை செய்ய பாகிஸ்தான் போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதா மற்றும் பயங்கரவாத்துக்கு எதிராக செயல் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதா என்பதை மதிப்பீடு செய்யும் ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கும் வேளையில், பயங்கரவாத அமைப்பான ஜெயிஷ்-ஏ-மொஹம்மத்தின் (Jaish-e-Mohammad) தலைவன் மசூத் அசாரை தாங்கள் தேடிக் கொண்டிருப்பதாகவும், அவர் குடும்பத்துடன் காணவில்லை என்றும், அவர் தங்கள் நாட்டில் இல்லை எனவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

FATF ஆலோசனை கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியம், ஐ.நா. சபை குழு, உலக வங்கி மற்றும் பிற அமைப்புகள் உட்பட உலகெங்கிலும் உள்ள 205 நாடுகள் மற்றும் அதிகார வரம்புகளைச் சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள். ஆனால் அதற்கு முன்னதாகவே பாகிஸ்தானின் நாடகம் ஆரம்பமாகியுள்ளது. பயங்கரவாத்துக்கு எதிராகவோ அல்லது மசூத் அசாருக்கு எதிராகவோ நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை (Pakistan) வலியுறுத்தினால், கடைசி கட்டத்தில் இதுபோன்று தகவல்களை அளிப்பதில் பாகிஸ்தானுக்கு இது முதல் முறையல்ல... ஆனால் உலக நாடுகள் உண்மையை அறியும். 

பாகிஸ்தான் இராணுவத்தின் (Pakistani Army) காவலில் இருந்து ஒரு சர்வதேச பயங்கரவாதி எப்படி தப்பிக்க முடியும். ஒரு பயங்கரவாதி திடிரென குடும்பத்துடன் காணமல் போய்விட்டார் என்று சொல்வது என்பது நம்பும்படியாக இல்லை. ஏதோ ஒரு திட்டத்துடன் தான் பாகிஸ்தான் மசூத் அசார் விவகாரத்தை கையாளுகிறது என்று தோன்றுகிறது. 

பாகிஸ்தானின் இந்த நாடகத்துக்கு முக்கியக்காரணம் "கருப்பு பட்டியல்" தான். அதாவது பயங்கரவாத அமைப்பிற்கு வழங்கப்படும் நிதியை கண்காணிக்கும் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு அமைப்பான FATF, பிப்ரவரி மாதத்திற்குள் பயங்கரவாதத்திற்கு அளிக்கும் நிதியுதவியை பாகிஸ்தான் கட்டுப்படுத்தப் படாவிட்டால், கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படும் என்று எச்சரித்தது. அப்போதிருந்து, பாகிஸ்தானின் இம்ரான் கான் அரசாங்கம் ஹபீஸை இறுக்கத் தொடங்கியது. 

2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, மும்பையில் 10 லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 160 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 300 பேர் காயமடைந்தனர். இதுபோன்ற பல தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ள பயங்கரவாதி மசூத் அசாருக்கு எதிர்கா பயங்கரவாத நிதி, பணமோசடி மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருத்தல் ஆகியவையின் கீழ் மொத்தம் 29 வழக்குகளை பதிவு செய்தது பாகிஸ்தான் பஞ்சாப் காவல்துறை. இதனையடுத்து கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி இரண்டு வழக்குகளில் ஐந்தரை ஆண்டுகள் என மொத்தம் 11 ஆண்டுகள் மசூத் அசாருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவருக்கு ரூ .15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து FATF நிம்மதி தெரிவித்தது. அடுத்த மாதம் கருப்பு பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வெளியே வர வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகின. 

இந்தநிலையில், தற்போது, பாகிஸ்தான் மீண்டும் நாடகம் ஆடத்தொடங்கியுள்ளது. இப்போது அசாரைக் காணவில்லை என பாகிஸ்தான் சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ-யின் ஹை.ஃபை பாதுகாப்பில் மசூத் அசார், ஆடம்பரமான வாழ்க்கையை நடத்தி வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையே. ஆனால், பாகிஸ்தான் அரசாங்கம், மசூத் அசார் மற்றும் அவரது குடும்பத்தைக் காணவில்லை என்ற பொய்யை பறப்புவதில் மும்முரமாக உள்ளன. 

பாகிஸ்தானின் நாடகம் அம்பலமாகினால், அந்நாடு "கருப்புப் பட்டியலில்" சேர்க்கப்படும். அப்படி சேர்க்கப்பட்டு விட்டால், அதன் பிறகு அவர்களின் நட்பு நாடான சீனாவாலும், அவ்வப்போது ஆதரவளிக்கும் அமெரிக்காவாலும் பாகிஸ்தானுக்கு ஒரு ரூபாய் கூட நிதியுதவி அளிக்க முடியாது. மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் சர்வதேச அளவில் தலைக்குனிவை சந்திக்க உள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Read More