Home> World
Advertisement

Omicron: மரணபீதியை ஏற்படுத்தும் BA.2 வேரியண்ட்..! இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

மரணபீதியை ஏற்படுத்தும் ஒமிக்ரானின் BA.2 வேரியண்ட் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Omicron: மரணபீதியை ஏற்படுத்தும் BA.2 வேரியண்ட்..! இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு

இந்தியாவில் மிகப்பெரிய ஆபத்தை ஏற்டுத்திய டெல்டா வேரியண்ட்டின் தொடர்ச்சியாக ஒமிக்ரான் பரவத் தொடங்கியுள்ளது. இதில் மிகப்பெரிய பாதிப்புகள் இல்லை என்று கூறப்பட்டாலும், அசாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடிய ஒமிக்ரானின் BA.2 வேரியண்ட் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 53 வகையான ஒமிக்ரான் திரிபுகள் இதுவரை கண்டறியப்பட்டிருந்தாலும்,  BA.1, BA.2 மற்றும் BA.3 ஆகிய திரிபுகள் குறிப்பிடத்தகுந்தவையாக உள்ளன. 

ALSO READ | Omicron தொற்றை எதிர்த்து போராட ஆயுர்வேதம் அளிக்கும் அற்புத வீட்டு வைத்தியங்கள்

இதுநாள் வரை பி.ஏ.1 வேரியண்ட் இங்கிலாந்தில் பரவி வந்த நிலையில், தற்போது பி.ஏ.2 வேரியண்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி கூறியுள்ளது. ஒமிக்ரான் வேரியண்டுகளின் அறிகுறிகள் மற்ற வேரியண்டுகளைப்போலவே இருப்பதால், அவற்றை குறிப்பிட்டு அடையாளமாக சொல்வதற்கான அறிகுறிகள் இல்லை என்றும் இங்கிலாந்து ஹெல்த் செக்யூரிட்டி தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் 53 வகையான வேரியண்டுகளில் BA.2 வேரியண்ட் அச்சுறுத்தக்கூடிய ஒன்றாக இருப்பதாகவும், இந்த வேரியண்டுக்கு என சிறப்புத் தோற்றம் எதுவும் இல்லை என விளக்கமளித்துள்ளது. 

 BA.1 மற்றும் BA.3 வேரியண்டுகளில் இருக்கும் ஸ்பைக் புரதங்கள் 69 முதல் 70 நீக்கக்கூடிய தன்மைகளை பெற்றிருப்பதாகவும், ஆனால் BA.2 வேரியண்ட்டில் அப்படியான அம்சம் இல்லை என சுட்டிக்காட்டபடுகிறது. இவை எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள இங்கிலாந்து ஹெல்த் செக்யூரிட்டி, விரைவில் அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்த விவரங்கள் ஆய்வு முடிவுகளில் தெரிய வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பி.ஏ1 ஒமிக்ரான் வேரியண்ட் அதிகளவில் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | Omicron பாதித்த குழந்தைகளில் இருக்கும் தீவிர அறிகுறிகள்: எச்சரிக்கை தேவை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More