Home> World
Advertisement

Missile: வட கொரியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை ஏற்படுத்தும் போர் அபாயம்

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை செய்ததாக வட கொரியா உறுதிப்படுத்தியது உலக அளவில் கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது

Missile: வட கொரியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை ஏற்படுத்தும் போர் அபாயம்

வட கொரியா, ஏவுகணை ஒன்றை சுட்டு பரிசோதித்தான சந்தேகங்கள் எழுந்த ஒரு நாளுக்குப் பிறகு அதை உறுதிப்படுத்திய கிம் ஜாங்-உன் அரசு, அது ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்றும் தெரிவித்தது.  

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை செய்ததாக வட கொரியா (North Korea) உறுதிப்படுத்தியது உலக அளவில் கவலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

வடகொரியா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஏவியது. அந்நாட்டின் பாதுகாப்புப் படைகள் 700 கிமீ தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கிய "ஹைப்பர்சோனிக் கிளைடிங் வார்ஹெட்" மூலம் சுட்டு பரிசோதித்ததாக, வட கொரியா அரசு ஊடகம் கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி (Korean Central News Agency (KCNA)) அறிவித்தது.

ALSO READ | சிரிக்க தடை விதித்த நாடு! மதுவுக்கும் தடா! துக்கத்தை அனுபவியுங்கள்

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் குறைந்த உயரத்தில் பறப்பவை; அவை ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கூடியவை. எனவே, அவற்றை கண்டறிவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

புதன்கிழமை நடத்தப்பட்ட புதிய ஏவுகணையின் வேகம் என்ன என்ற விவரங்களை KCNA தெரிவிக்கவில்லை. இது, வழக்கமான மற்றும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய திறன் படைத்தது.

fallbacks

பல-படிகள் சறுக்கி, சுழன்று செயல்படக்கூடியது மற்றும் வலுவான பக்கவாட்டு செயல் திறனை கொண்ட ஏவுகணயின் திறன், இந்த பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டதாக வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வடகொரியா, பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியதாக தென் கொரியாவும் ஜப்பானும் நேற்று (புதன்கிழமை, ஜனவரி 05, 2022) தெரிவித்திருந்தன.

 சீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியது, இந்த சோதனையை லண்டன் செய்தித்தாள் உறுதிப்படுத்தியது, இருந்தபோதிலும் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அதை சீன அரசு மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | இசையை கேட்டதற்காக 7 பேருக்கு பொதுவில் பொது மரண தண்டனை..!!

"ஹைபர்சோனிக் ஏவுகணைத் துறையில் சோதனை ஏவுதலின் தொடர்ச்சியான வெற்றிகள் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தவை, அவை நாட்டின் மூலோபாய ஆயுதப் படையை நவீனமயமாக்குவதற்கான பணியை துரிதப்படுத்துகின்றன" என்று KCNA தெரிவித்துள்ளது.

வட கொரிய ஆட்சியின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளை, அமெரிக்க அரசு விமர்சித்தது. வட கொரியாவின் செயல், "பல ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறுவதாகும்" என்று கண்டனங்களையும் வெளியிட்டது அமெரிக்கா.

முன்னதாக, 2019 இல் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமையில் அந்நாட்டுடன் கிம் ஜாங் உன் (Kim Jong Un) அணு ஆயுத ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார்.

ஆனால், வட கொரியா தனது ஏவுகணைத் திட்டத்தைத் தொடர்ந்ததால், அந்த உடன்பாடு மீறப்பட்டதுடன், அமெரிக்காவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடங்கியது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | நிறைய சாப்பிட்டா நாட்டுக்கு நல்லதல்ல’ அதிபர் கிம்மின் உத்தரவு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More