Home> World
Advertisement

கொரியா தீவில் பதற்றம்!! அடுத்தடுத்து ஏவுகணை சோதனை செய்யும் வடகொரியா

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இன்று மட்டும் 2 ஏவுகணை சோதனைகள் நடத்தி உள்ளது.

கொரியா தீவில் பதற்றம்!! அடுத்தடுத்து ஏவுகணை சோதனை செய்யும் வடகொரியா

சியோல்: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இன்று மட்டும் 2 ஏவுகணை சோதனைகள் நடத்தி உள்ளது.

ஐ.நா. தீர்மானங்களையும் மீறி, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அணுகுண்டுகளை சோதனை செய்து, பன்னாட்டளவில், வடகொரியா தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், அமெரிக்காவுக்கும் - வடகொரியாவுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது. இந்தச்சூழலில், வடகொரிய-தென்கொரிய அதிபர்கள் அடுத்தடுத்து சந்தித்துப் பேசினர். இதனால், இரு நாடுகளிடையே இணக்கமான சூழல் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அமெரிக்கா-வடகொரியா இடையிலான போர்ப்பதற்றத்தை தணிக்கும் முயற்சியை தென்கொரிய அதிபர் தொடங்கினர். இதன் பலனாக, சிங்கப்பூரில் வைத்து, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதன்முறையாக சந்தித்துப் பேசினார். அணு ஆயுதங்களை குறைப்பது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. பின்னர், அதிலும், பரஸ்பரம் கருத்துவேறுபாடு நிலவியது. இரண்டாவது முறையாக, வடகொரிய அதிபரை, வியட்நாமில் வைத்து, டிரம்ப் சந்தித்தார். இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. மீண்டும் ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பானிலிருந்து தென்கொரியாவிற்கு சென்ற அமெரிக்க அதிபர், வடகொரிய அதிபரை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இருநாடுகளின் அதிகாரிகள், முன்னிலையில், டிரம்ப்-கிம் ஜோங் உன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்ப்படவில்லை.

இந்தநிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு உதாரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3வது முறையாக ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது. 

அதன் ஒருபதியாக இன்று அதிகாலை 2.59 மணி மற்றும் 3.23 மணிக்கு குறைந்த தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை ஒன்றை இரண்டுமுறை வடகொரியா பரிசோதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுக்குறித்து தென் கொரியாவின் இராணுவம் கூறுகையில், கடந்தமுறை ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்ட அதே பிராந்தியமான வடக்கின் பகுதியான தெற்கு ஹம்ஜியோங் மாகாணத்திலிருந்து உள்ளூர் நேரம் அதிகாலை 2:59 மற்றும் அதிகாலை 3:23 மணிக்கு ஏவுகணைகள் ஏவப்பட்டன. அது 15 சுமார் மைல்கள் உயரத்தில் 135 மைல் தூரம் பறந்ததாகவும், அதேபோல 2வது பாலிஸ்டிக் ஏவுகணை அதிகபட்சமாக 18 மைல் உயரத்தில் 155 மைல் தூரம் பறந்தன எனத் தெரிவித்துள்ளனர்.

"கொரிய தீபகற்பத்தில் இராணுவ பதட்டங்களைத் தணிக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக வட கொரியாவில் செயல்பாடுகள் இருக்கிறது. இது பதட்டத்தை முடிவுக்கு என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்று தென் கொரியாவின் ஜனாதிபதி ப்ளூ ஹவுஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read More