Home> World
Advertisement

தலாய்லாமாவை சந்திப்பது ஒரு "பெரிய குற்றம்": சீனா

தலாய் லாமாவை எந்த நாட்டு தலைவர்கள் சந்தித்தாலும் அது எங்களை பொறுத்தவரை மிகப்பெரிய குற்றம்

தலாய்லாமாவை சந்திப்பது ஒரு

தலாய் லாமாவை எந்த நாட்டு தலைவர்கள் சந்தித்தாலும் அது எங்களை பொறுத்தவரை மிகப்பெரிய குற்றம் என சீனா கூறியுள்ளது. இது தொடர்பாக சீன துணை அமைச்சர் ஜாங் ஜிஜோங் கூறியது:-

எந்த நாட்டு தலைவர்களோ அல்லது அமைப்புகளோ தலாய்லாமாவை சந்திப்பது எங்கள் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு செய்யும் குற்றம் ஆகும். 

தலாய்லாமாவை ஒரு மத தலைவர் என்று எந்த நாடு கூறினாலும் அதனை எங்களால் ஏற்க முடியாது. தலாய் லாமா வரலாற்றால் புறக்கணிக்கப்பட்டவர். மதத்தை மேல் அங்கியாக அணிந்த அரசியல் பிரமுகர். தாய்நாட்டிற்கு துரோகம் செய்தவர் அவர். இவ்வாறு அவர் கூறினார்.

Read More