Home> World
Advertisement

டிரம்ப் ஆதரவாளர்களுக்கு மெலெனியா டிரம்ப் விடுத்துள்ள கோரிக்கை...!!

ஜோ பைடனின் பதவியேற்புக்கு ஒரு நாள் முன்னதாக, அமெரிக்காவின் பர்ஸ்ட் லேடி மெலனியா டிரம்ப் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19, 2021) ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

டிரம்ப் ஆதரவாளர்களுக்கு மெலெனியா டிரம்ப் விடுத்துள்ள கோரிக்கை...!!

ஜோ பைடனின் பதவியேற்புக்கு ஒரு நாள் முன்னதாக, அமெரிக்காவின் பர்ஸ்ட் லேடி மெலனியா டிரம்ப் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 19, 2021) அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்தார்.

தனது செய்தியில், அமெரிக்காவின் பர்ஸ்ட் லேடி மெலனியா டிரம்ப் (Melania Trump), "நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் ஈடுபாட்டுடன் இருங்கள், ஆனால் வன்முறை ஒருபோதும் தீர்வு அல்ல, ஒருபோதும்  அதை நியாயப்படுத்த முடியாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்" என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், "எந்த ஒரு சூழ்நிலைகளிலும், ஒவ்வொரு அமெரிக்கரும் சிறந்தவராக திகழ வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நம்மை ஒன்றிணைக்கும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நம்மைப் பிரிக்கும் விஷயங்களை புறம் தள்ள வேண்டும்” என்றார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump)ஆதரவாளர்கள் ஜனவரி 6 ஆம் தேதி நடந்த கேபிடோல் வன்முறையை மனதில் கொண்டு அவர் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார். அந்த வன்முறையில் ஐந்து பேர் இறந்தனர்.

அவர் மேலும் கூறுகையில், "தேசமே ஒரு குடும்பமாக, எதிர்கால தலைமுறையினருக்கான நம்பிக்கையின் வெளிச்சமாக நாம் தொடர்ந்து இருக்க முடியும், மேலும் நமது தைரியம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் நம் தேசத்தை மிகவும் உயரத்திற்கு கொண்டு செல்லும் அமெரிக்காவின் பாரம்பரியத்தை தொடர வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

"உங்கள் பர்ஸ்ட் லேடியாக பணியாற்றிய பாக்கியம் கிடைத்தது. எனது நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இந்த நாட்டின் அனைத்து மக்களும்  என்றென்றும் என் இதயத்தில் இருப்பீர்கள்" என்று மெலனியா டிரம்ப் கூறினார்.

புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் (Joe Biden)பதவி ஏற்பு விழாவை ஒட்டி, 25,000 க்கும் மேற்பட்ட தேசிய காவல்படை துருப்புக்க்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

நவம்பர் 3, 2020 நடந்த அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்பை தோற்கடித்த ஜோ பிடன் அமெரிக்காவின் 46 வது அதிபராக நாளை பொறுப்பேற்க உள்ளார்.

ALSO READ | இந்தியாவிடம் COVID-19 தடுப்பூசி கோரும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ள கம்போடியா

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More