Home> World
Advertisement

Russia-Ukraine War Live Updates: கீவில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம்

உக்ரைன்-ரஷ்யா போர்: உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் இன்று ஐந்தாவது நாளாகும். பல குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் கியேவில் பதிவாகியுள்ளன. அமெரிக்கா-இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு உதவ முன் வந்துள்ளன. ரஷ்யாவுக்கு எதிரான போரில் இந்த நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றன. ஆனால் அணு ஆயுதப் போரின் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் உள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அணுசக்தியை எச்சரித்துள்ளார், இதற்கு பதிலளிக்கும் விதமாக அணுசக்தி கண்காணிப்பு நிறுவனம் ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது.

Russia-Ukraine War Live Updates: கீவில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு நீக்கம்
LIVE Blog
28 February 2022
18:00 PM

உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் ராணுவ உதவி:

நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் தொட்டி எதிர்ப்பு ஆயுதங்களை வழங்கியுள்ளன. நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் இன்று ஒரு ட்வீட்டில் உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் பேசியதாகவும் கூறினார்.

17:00 PM

பகிரங்கமாக தங்கள் "நிலைப்பாட்டை அறிவிக்க" ரஷ்யா தயக்கம்

உக்ரைன் தூதுக்குழுவுடனான பேச்சு வார்த்தைக்கு முன்னர், தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்க மாட்டோம் என்று ரஷ்யா திங்களன்று கூறியுள்ளது.

இரு நாடுகளின் பிரதிநிதிகளும் திங்கள்கிழமை பேச்சுவார்த்தைக்காக எலாருசிய-உக்ரைன் எல்லைக்கு வந்தனர்.

16:45 PM

"விளாடிமிர் புடின் - 21 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர்"

விளாடிமிர் புட்டினை 21ஆம் நூற்றாண்டின் ஹிட்லர் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி குலேபா தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் முறித்துக் கொள்ளுமாறு மற்ற நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று ரஷ்யாவுடன் வணிகம் செய்வது என்பது ஆக்கிரமிப்பு, போர்க்குற்றங்கள், பிரச்சாரம், சைபர் தாக்குதல்கள் மற்றும் விளாடிமிர் புடின் என்ற 21 ஆம் நூற்றாண்டின் ஹிட்லருக்கு தனிப்பட்ட முறையில் நிதியளிப்பதாகும். எனவும் தெரிவித்துள்ளார். 

16:45 PM

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கான பயண வழிகாட்டுதல்களை இந்திய அரசு திருத்தம் செய்து வெளியிட்டுள்ளது:

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) சர்வதேச பயண ஆலோசனையை திருத்தம் செய்துள்ளது. அதாவது உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு பல்வேறு விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன. உக்ரைனில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்கள், ஏர்-சுவிதா போர்டலில் விமானத்தில் பயணம் செய்வதற்கு முன் இருந்த கட்டாய கோவிட் நெகட்டிவ் ஆர்டிபிசிஆர் சோதனை மற்றும் தடுப்பூசி சான்றிதழுடன் ஆவணங்களைப் பதிவேற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. 28 பிப்ரவரி 2022 நிலவரப்படி, உக்ரைனில் இருந்து 1156 இந்தியர்கள் இந்தியா வந்துள்ளனர். அவர்களில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

15:30 PM

போர் நிறுத்தம் குறித்து ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்:
ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு முக்கியக் காரணமே யுத்த நிறுத்தத்தை உடனடியாக அமுல்படுத்துவதே என உக்ரைன் அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கக்து.

14:15 PM

இந்திய அரசின் #OperationGanga: மீட்பு பணியில் இண்டிகோவின் இரு விமானங்கள்

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்காக ஏ321 விமானங்களை பயன்படுத்தி இண்டிகோ விமான நிறுவனம் 2 மீட்பு விமானங்களை இயக்குகிறது. இந்த விமானங்கள் டெல்லியில் இருந்து புக்கரெஸ்ட், ருமேனியா மற்றும் புடாபெஸ்ட், இஸ்தான்புல் வழியாக ஹங்கேரிக்கு இன்று இயக்கப்படுகின்றன. இந்த மீட்பு நடவடிக்கை இந்திய அரசின் #OperationGanga பணித்திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

13:15 PM

கியேவில் வார இறுதி ஊரடங்கு நீக்கப்பட்டது
உக்ரைன் தலைநகர் கீவில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதிகளுக்குச் செல்வதற்காக அனைத்து மாணவர்களும் ரயில் நிலையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளியேற்றத்திற்காக உக்ரைன் ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.

13:15 PM

பெலாரஸில் ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது
பெலாரஸ் நாட்டில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான களம் அமைக்கப்பட்டுள்ளதாக பெலாரஸ்-உக்ரைன் சந்திப்பில் பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் கூறினார். அவர் ரஷ்யா-உக்ரைன் பிரதிநிதிகளை பார்வையிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

12:15 PM

ரஷ்யா - உக்ரைன் விவகாரம்: தொடர்கிறது இந்தியர்களின் மீட்பு நடவடிக்கை

புடாபெஸ்டில் (ஹங்கேரி) இருந்து ஆபரேஷன் கங்காவின் ஆறாவது விமானம் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு புறப்படுகிறது என்றும், இதில் 240 இந்திய பிரஜைகள் தலைநகர் டெல்லிக்கு அழைத்து வரப்படுகிறார்கள் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

12:00 PM

மீளா துயரில் தவிக்கும் உக்ரைன் வாழ் தமிழக மாணவர்

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சங்கர் - சசிகலா மகன் சக்திவேல், உக்ரைன் முஜைல் பகுதியில் உள்ள கல்லூரியில் மருத்துவம் 5ஆம் ஆண்டு பயின்று வருகிறார். தற்போது உக்ரைனில் சிக்கியுள்ள தனது மகனை நினைத்து தாய் சசிகலா பெரும் துயரில் ஆழ்ந்த நிலையில், எதிர்பாராவிதமாக மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தாயின் இறுதி சடங்குகளை இளைய மகன் செய்ய வேண்டிய நிலையில் சக்திவேல் நாடு திரும்ப முடியாமல் வீடியோ காலில் தாயின் உடலை பார்த்து கதறி அழுத நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

11:30 AM

பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை:

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே உள்ள போர் சூழல் மற்றும் பதட்டத்துக்கு மத்தியில், போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு ஐரோப்பிய தேசத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்டக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சில மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்று இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கக்கூடும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

11:00 AM

ரஷ்யாவின் நாணயம் 30 சதவீதம் சரிந்தது
உக்ரைனுடனான போருக்கு நடுவே பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தது. அதன்படி ரஷ்யாவின் கரன்சி ரூபெல் 30 சதவீதம் சரிந்துள்ளது.

11:00 AM

SWIFT இலிருந்து ரஷ்ய வங்கிகள் அகற்றப்படும்
SWIFT வங்கி அமைப்பில் இருந்து பல ரஷ்ய வங்கிகளை நீக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவின் மத்திய வங்கி மீதும் சில தடைகள் விதிக்கப்படலாம்.

11:00 AM

ரஷ்யாவின் ஏவுகணை அமைப்பு அழிக்கப்பட்டது
உக்ரைன் ரஷ்ய இராணுவத்தின் முன் தலைகுனிய தயாராக இல்லை. ரஷ்யாவின் ஏவுகணை அமைப்பை உக்ரைன் ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் குறிவைத்துள்ளது.

11:00 AM

உக்ரைனில் மரணம்
கீவ் மற்றும் கார்கிவ் ஆகிய இடங்களில் மீண்டும் வெடி சத்தம் ஏற்பட்டுள்ளது. யுத்தத்தில் இதுவரை 14 சிறுவர்கள் உட்பட 352 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைனில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More