Home> World
Advertisement

G-20 உச்சி மாநாட்டைத் தவிர்க்கும் சீனா... ஏமாற்றம் அடைந்த ஜோ பைடன்!

இந்தியாவில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதில் இருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் விலகி உள்ளார். அவருக்குப் பதிலாக, பிரதமர் லீ கியாங் புதுதில்லிக்கு வருகிறார்.

G-20 உச்சி மாநாட்டைத் தவிர்க்கும் சீனா... ஏமாற்றம் அடைந்த ஜோ பைடன்!

பெய்ஜிங்: ஜி-20 அமைப்பிற்கு, இந்தாண்டு இந்தியா தலைமை வகிப்பதை ஒட்டி, ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் முக்கிய மாநாடு செப்.,9 மற்றும் 10 தேதிகளில் புதுடில்லி பிரகதி மைதானத்தில் நடக்க உள்ளது. மாநாட்டிற்காக ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக செய்து வருகிறது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொள்ளவில்லை. ஜி20 மாநாட்டுக்காக பல உலகத் தலைவர்கள் இந்தியாவில் திரளவுள்ள நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் இதில் பங்கேற்கவில்லை. செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்கு ஜின்பிங் புதுதில்லிக்கு வருவாரா என்பது குறித்து அவரது செய்தித் தொடர்பாளர் சரியாக கூறாததால் சஸ்பென்ஸ் நீடித்தது. இறுதியாக, ஜின்பிங்கிற்குப் பதிலாக பிரதமர் லீ கியாங் சீனாவின் பிரதிநிதியாக கலந்து கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் ஜி ஜின்பிங் பங்கேற்காததற்கு பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பிடனும் தான் காரணம் என ஒரு தகவல் தெரிவிக்கிறது. இரு தலைவர்களுக்கும் இடையே ஆன சந்திப்பை சீன அதிபர் ஜின்பிங் அவ்வளவாஅக் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஜின்பிங்கின் தற்போதைய அறிவிப்புக்கு பின்னர், இது குறித்து கூறிய, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ‘ ஜி 20 மாநாடு நடக்கும் இந்தியாவுக்கான பயணத்தை மிக ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜி 20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொள்ளாதது பற்றி  அறிந்த போது நான் ஏமாற்றம் அடைந்தேன்’ என்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தால் ஜின்பிங் மற்றும் பிடென் இடையேயான சந்திப்பு தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. சில அமெரிக்க அதிகாரிகள் சமீபத்திய மாதங்களில் பெய்ஜிங்கிற்குச் சென்றிருந்தனர். இந்த சுற்றுப்பயணத்தில் வர்த்தக அமைச்சர் ஜினா மோண்டோவின் சீன விஜயமும் அடங்கும்.

மேலும் படிக்க | BRICS அமைப்பில் பாகிஸ்தானிற்கு நோ என்ட்ரி... கைவிட்ட சீனா, ரஷ்யா!

பிரிக்ஸ் மாநாட்டில் அதிபர் ஜின்பிங் பிரதமர் மோடி சந்திப்பு

மாநாட்டில் ஜின்பிங் பங்கேற்காமல் தவிர்ப்பது சர்வதேச அரங்கில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் கூட்டத் தொடரில் இரு தலைவர்களின் அரிய சந்திப்பு நடந்தது. இதில், அதிபர் ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் எல்லைப் பிரச்னையை தாமதிக்காமல் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க வேண்டும் என்று கூறினார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்குப் பிறகு, அருணாச்சல பிரதேசம் மற்றும் கிழக்கு லடாக் பகுதிகளை சீனப் பகுதிகளாகக் காட்டும் வரைபடத்தை சீனா வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் பதிலடி கொடுத்தது. சுவாரஸ்யமாக, முதல் முறையாக அமெரிக்காவும் பல நாடுகளும் சீனாவின் பிடிவாதமான கொள்கைக்கு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தின. அதே நேரத்தில், வரைபட சர்ச்சையை இந்தியா தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்று சீனா மிகவும் அலட்சியமாக பதிலளித்தது.

இந்தியாவை கண்டு அஞ்சும் சீனா!

ஆகஸ்ட் 23 அன்று தென் துருவத்தில் சந்திரயான் -3 மெதுவாக தரையிறங்கியது மற்றும் ஆதித்யா எல் 1 விண்கலம் இந்தியாவை ஒரு பெரிய விண்வெளி சக்தியாக நிலைநிறுத்தியுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக வளர்ந்து வரும் நிலையில், சீனாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து வருகிறது. இந்தியாவின் இந்த எழுச்சி சீனாவுக்கு சிவப்புக் கொடி. மேலும், ஜி 20 மாநாட்டிற்கு ஒரு நாள் முன்னதாக பிடென் புது டெல்லி வருகிறார். அவர் பிரதமர் மோடியை சந்திக்கிறார் என்பது ஜின்பிங்கிற்கு அசௌகரியத்தை கொடுத்துள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஜி 20 மூலம், சீனா தனது வல்லரசு அந்தஸ்து ஆபத்தில் இருப்பதாக  சீனா நினைக்கிறது.

மேலும் படிக்க | Worlds biggest cemetery: அமைதியின் பள்ளத்தாக்கு மயானம்! உலகிலேயே மிகப் பெரிய இடுகாடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More