Home> World
Advertisement

வடகொரியாவின் முதல் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் தயார் என்பது உண்மையா?

3,000 டன் நீர்மூழ்கிக் கப்பலின் கட்டுமானத்தை முடித்துவிட்ட வட கொரியா, சரியான நேரத்தில் அதைத் இயக்க வடகொரியா தயாராக இருப்பதாக தென் கொரியா சந்தேகம் தெரிவித்துள்ளது

வடகொரியாவின் முதல் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் தயார் என்பது உண்மையா?

சியோல், தென் கொரியா: 3,000 டன் நீர்மூழ்கிக் கப்பலின் கட்டுமானத்தை வட கொரியா முடித்துவிட்டதாக தென் கொரியா பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்ல, சரியான நேரத்தில் அதைத் இயக்க வடகொரியா தயாராக இருப்பதாகவும் தென் கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறை சந்தேகிப்பதாக ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 11) செய்தி வெளியிட்டுள்ளன. 

"2019 ஜூலை மாதத்தில் 3,000 டன் நீர்மூழ்கிக் கப்பல் குறித்து வடகொரியா செய்தி வெளியிட்டிருந்தது. அந்த நீர்மூழ்கிக் கப்பல் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டுவிட்டது என தென் கொரியா மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் இருவரும் நம்புகின்றனர்" என்று அந்த வட்டாரங்கள் தேசிய செய்தி ஊடகமான யோன்ஹாப் செய்தி நிறுவனத்திடம் (Yonhap News Agency) தெரிவித்தன. 

இந்த செய்தி ஒரு அமெரிக்க நிபுணர் குழுவிடம் இருந்து கிடைத்ததாக கூறப்படுகிறது. நீரில் மூழ்கக்கூடிய ஏவுகணை சோதனையை, வடகொரியா  ஒரு புதிய நிலைக்கு நகர்த்தியதாக வட கொரியா கூறியுள்ளது, இது நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணையாக (submarine-launched ballistic missile (SLBM) ) இருக்கலாம் என்று சோதனைகள் சுட்டிக்காட்டுகின்றன என்றும் கூறப்படுகிறாது. 

Also Read | Kim Jong Un: வடகொரியா முன்னெப்போதையும் விட மோசமான நிலைமையில் இருக்கிறது

"இந்த சோதனையை சரியான சமயத்தில் செய்வதற்கான உகந்த நேரத்தை வட கொரியா மறுஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.வடகொரியாவின் இந்த நடவடிக்கை, அமெரிக்காவுக்கு எதிரான அழுத்தத்தை அதிகரிப்பது உட்பட ஒரு மூலோபாய விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இந்த செய்தி உண்மையானதாக இருந்தால், இதுவட கொரியாவின் முதல் உண்மையான பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலாக இருக்கும். கடந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெற்ற வருடாந்திர ராணுவ அணிவகுப்பில் வடகொரியா அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை ஆயுதங்களை காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Also Read | Google Maps செய்த குழப்பத்தால் Life Map மாறாமல் தப்பித்த மணமகனின் பகீர் அனுபவம் Watch Video

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More