Home> World
Advertisement

10 மாதங்களுக்கு முன்பு ஆற்றில் தவறவிட்ட ஐபோன்... புதுசுபோல வேலை செய்யும் அதிசயம்!

ஆற்றில் தவறவிட்ட ஐபோன் மொபைல் 10 மாதங்களுக்குப் பிறகு தண்ணீரிலிருந்து வேலை செய்யும் நிலையில் கண்டுபிடித்து எடுக்கப்பட்டது.  

10 மாதங்களுக்கு முன்பு ஆற்றில் தவறவிட்ட ஐபோன்... புதுசுபோல வேலை செய்யும் அதிசயம்!

கடந்த ஆகஸ்ட் 2021 இல் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓவைன் டேவிஸ் என்பவர் இளங்கலை படிப்பை முடித்தார். அதை கொண்டாடுவதற்காக சின்டர்ஃபோர்ட் அருகே உள்ள வை நதி அருகே நடத்தப்பட்ட கிராஜுவேஷன் பார்ட்டியில் பங்கேற்றார்.

அப்போது அவர், கைதவறி தனது ஐபோனை நதியில் போட்டுவிட்டார். இதையடுத்து அவர் நதியில் இருந்து போனை மீட்டெடுப்பது சாத்தியமற்றது என எண்ணி வீடுதிரும்பிவிட்டார்.

இதையடுத்து ஏறக்குறைய பத்து மாதங்களுக்குப் பிறகு, அதே ஆற்றில் தனது குடும்பத்துடன் மிகுவல் பச்சேகோ என்பவர் கேனோயிங் சென்றார். அவரது அந்த பயணத்தின்போது, நதியின் உள்ளே சிக்கியிருந்த ஓவைன் டேவிஸின் ஐபோனை கண்டெடுத்துள்ளார்.

மேலும் படிக்க | உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இந்த பழங்களை அவசியம் டயட்டில் சேர்க்கவும்

பிறகு நடந்ததுதான் ஆச்சரியத்தின் உச்சம். வீட்டிற்கு சென்ற மிகுவல், சேற்றில் மூழ்கியபடி இருந்த அந்த ஐபோனை துடைத்து சுத்தப்படுத்தி அதில் உள்ள ஈரம் போகும் வரை நன்கு உலர்த்தி வைத்துவிட்டு உறங்கினார்.

அடுத்த நாள் முழித்து போனை சார்ஜ் செய்ய முற்பட்டார். அதிர்ஷ்ட வசமாக போனில் சார்ஜ் ஏறியது. சற்று நேரத்தில் போதுமான அளவு சார்ஜ் ஏறியதும் போனை அவர் ஆன் செய்தார். சிறிதும் சிக்கல் இன்றி ஐபோன் புதியது போல் இயங்கியது.

மேலும் அந்த போனில் ஆகஸ்ட் 13 என்ற தேதி காண்பித்தது. அதாவது ஆற்றில் விழுந்த தேதி அது. இதன்பின்னர் ஐபோனை உரியவரிடத்தில் சேர்க்கும் முயற்சியாக மொத்த நிகழ்வையும் போட்டோக்களாக பிடித்து விளக்கமளித்து பேஸ்புக்கில் பதிவிட்டார்.

மேலும் படிக்க | Detoxify: உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை டயட்டில் சேர்க்கவும்

அவரது அந்த பதிவு 4000 முறை பகிரப்பட்டது. ஆனால் ஐபோனின் உரிமையாளர் பேஸ்புக் பயன்படுத்துவதில்லையாம். இதனால் அவரால் அந்த பதிவை காண முடியாமல் போனது. பின்னர் ஓவைன் டேவிஸின் நண்பர்கள் சிலர் இந்த பதிவை கண்டனர். அதிலுள்ள புகைப்படத்தை அடையாளம் கண்டுக்கொண்டு ஓவைன் டேவிஸிடம் தகவல் தெரிவித்தனர்.

பிறகு என்ன? உரிமையாளர் ஓடோடி வந்து தனது தொலைந்துபோன போனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். தற்போதைய ஐபோன் மாடல்கள் வாட்டர் புரூப்புடன் வருகிறது. ஆனால் விழுந்த அந்த போன் வாட்டர் புரூப் இல்லை என்பது குறிப்பிடதக்கது. அதுவும் 10 மாதங்களாக தண்ணீரில் மூழ்கி இருந்த ஒரு மின் சாதனம் பாதிப்படையாமல் மீண்டும் பழையபடி செயல்படுவது இயற்கைக்கே எதிரான விஷயம்போல் தான் தோன்றுகிறது.

மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More