Home> World
Advertisement

அமெரிக்காவுக்கு போயும் போலி ஓட்டா? வழக்கில் சிக்கிய இந்தியர்!!

கடந்த காலங்களில் இந்தியாவில் போலி வாக்களிப்பு பற்றிய செய்திகள் சாதாரணமாகி விட்டன. ஒவ்வொரு தேர்தலிலும் போலி வாக்குகள் பற்றிய குற்றச்சாட்டுகளும் சலசலப்புகளும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

அமெரிக்காவுக்கு போயும் போலி ஓட்டா? வழக்கில் சிக்கிய இந்தியர்!!

நியூயார்க்: கடந்த காலங்களில் இந்தியாவில் போலி வாக்களிப்பு பற்றிய செய்திகள் சாதாரணமாகி விட்டன. ஒவ்வொரு தேர்தலிலும் போலி வாக்குகள் பற்றிய குற்றச்சாட்டுகளும் சலசலப்புகளும் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் இப்போது இது பற்றிய ஒரு புதிய விவகாரம் அமெரிக்காவிலிருந்து (America)  வந்துள்ளது. அதற்கு நாம் ஏன் கவலைப்பட வெண்டும் என்று கேட்டால், அதற்கு ஒரு காரணமும் உள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியத் தொடர்பு உள்ளது. 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் (American Elections) போது போலி வாக்களித்த வழக்கில் ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் சிக்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் அவர் இப்போது சிறையில் தள்ளப்படும் நிலையும் ஏற்படலாம் என கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் பைஜு பொட்டாகுலத் தாமஸ் ஆகும். அவருக்கு வயது 58 என்று கூறப்படுகிறது.

ALSO READ: ‘டிரம்ப் நிர்வாகம் மீது வழக்கு தொடர்வதை விட எங்களுக்கு வேறு வழி இல்லை’: அச்சுறுத்தும் Tik-Tok!!

முழு விவகாரம் என்ன?

2016 ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபருக்கான தேர்தலின் போது, மோசடி செய்து வாக்களித்ததற்காக பைஜு உட்பட 11 பேர் மீது அமெரிக்க ஏஜென்சிகள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் உண்மை என கண்டறியப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு லட்சம் டாலர் அபராதமும் ஒரு வருட சிறைத்தண்டனையும் கிடைக்கக்கூடும்.

எப்படி போடப்பட்டது போலி வாக்கு?

பைஜூவுடன், மேலும் 11 பேர் தங்களைப் பற்றி தவறான தகவல்களைக் கொடுத்து வாக்களிக்கும் உரிமையைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையும் உள்நாட்டு பாதுகாப்பு நிறுவனமும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளன.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய குடிமகன் மீதும் இதே போன்ற குற்றச்சாட்டுகள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய குடிமகனான ரூப் கவுர் அதர் சிங் மீதும் இதே போன்ற குற்றச்சாட்டு உள்ளது. அவருக்கு எதிராக வட கரோலினாவில் (North Carolina) வழக்கு நடந்துகொண்டிருக்கின்றது. 2016 தேர்தலில் அவரும் வாக்களித்தார். ரூப் தனது குடியுரிமை குறித்து தவறான தகவல்களை அளித்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3.5 லட்சம் டாலர் அபராதமும் கிடைக்க வாய்ப்புள்ளது. 

ALSO READ: இந்தியாவுக்குப் பிறகு, மலேசியாவும் இந்த நாடுகளை 'No entry' பட்டியலில் சேர்த்தது....

Read More