Home> World
Advertisement

அமெரிக்காவில் Black Lives Matter போராட்டத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

துப்பாக்கிச் சூட்டின் போது ஒருவர் கொல்லப்பட்டதாக ஆஸ்டின் காவல் துறை மற்றும் அவசர மருத்துவ சேவைகள் ட்விட்டரில் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவில் Black Lives Matter போராட்டத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரத்தின் ஆஸ்டின் நகரில் சனிக்கிழமை நடந்த பிளாக் லைவ்ஸ் மேட்டர் (Black Lives Matter protest) போராட்டத்தின் மத்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டின் போது ஒருவர் கொல்லப்பட்டதாக ஆஸ்டின் காவல் துறை மற்றும் அவசர மருத்துவ சேவைகள் ட்விட்டரில் தெரிவித்துள்ளன.

ஒரு பேஸ்புக் லைவ் போது வெளியிடப்பட்ட காட்சிகளில் டெக்சாஸ் தலைநகரில் சுமார் 100 பேர் அணிவகுத்து கருப்பினத்தவருக்கு ஆதரவாக,"Fists up! Fight back!" என கோஷமிட்டனர்.

ALSO READ | தென் சீனக் கடல் சீனாவின் சாம்ராஜ்ஜியம் அல்ல: அமெரிக்கா

துப்பாக்கிச் சூட்டின் போது ஒருவர் கொல்லப்பட்டதாக  கூறியஆஸ்டின்  காவல் துறை கூறியது. வேறு  யாரும் இறக்கவில்லை  என்று அவசர மருத்துவ சேவை பிரிவு கூறியுள்ளது.

ஆரம்ப அறிக்கைகள் துப்பாக்கி ஏந்திய  சந்தேக நபர் ஒரு துப்பாக்கியினல் காரில் இருந்த பாதிக்கப்பட்டவரை சுட்டுக் கொன்றதாகவும், போலீசார் தெரிவித்தனர். சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ALSO READ | கார்கில் வெற்றி தினம்  2020: கார்கில் மூலம் கல்வான் கற்றுக் கொள்ளும் பாடங்கள் என்ன

மினியாபோலிஸில் போலீஸ் காவலில் இறந்த ஆப்பிரிக்க-அமெரிக்கரான் ஜார்ஜ் ஃபிலாய்ட் மே மாதம் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இனவெறி மற்றும் போலீஸாரின் மிருகத்தனமான நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்கள் உலகளவில் நடத்தப்பட்டன. ஒரு காவல்துறை அதிகாரி அவரைக் காவலில் வைத்து கிட்டத்தட்ட ஒன்பது நிமிடங்கள் கழுத்தில்  முழங்காலை வைத்து அழுத்தியதால்,  ஃப்ளாய்ட் இறந்தார்.

Read More