Home> World
Advertisement

மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி... காதலிக்கு 10 நிமிடம் விடாமல் கிஸ் கொடுத்தவருக்கு காது செவிடானது

Bizarre News: உணர்ச்சிவசப்பட்டு காதலியை இடைவிடாமல் 10 நிமிடங்கள் முத்தமிட்ட இளைஞருக்கு திடீரென காது கேட்காமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி... காதலிக்கு 10 நிமிடம் விடாமல் கிஸ் கொடுத்தவருக்கு காது செவிடானது

Bizarre News: ஒரு சீன இளைஞர் காதலியை 10 நிமிடங்கள் இடைவிடாமல் முத்தமிட்ட தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கொண்டுசெல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர் தனது காதலியுடன் மூச்சு முட்ட முத்தம் கொடுத்ததால், அவருக்கு காது கேளாமை மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி அன்று, அந்த குறிப்பிட்ட ஜோடி முத்தமிட்டுக் கொண்டிருந்தபோது, ​​திடீரென்று அந்த நபர் தனது காதில் பயங்கரமான வலியை உணர்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியட்டுள்ளன. இந்த ஜோடி சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள மேற்கு ஏரியில் டேட்டிங் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நபருக்கு வலி ஏற்பட்ட உடன், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது காது குழியில் துளையிடப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். அவர் முழுமையாக குணமடைய இரண்டு மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டு, மருத்துவர்கள் அவருக்கு சில ஆண்டிபயாட்டிக்குகளை பரிந்துரைத்துள்ளனர்.

மேலும் படிக்க | பெண்ணின் மூளைக்குள் உயிருள்ள புழு! அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்!

உணர்ச்சிவசப்பட்டு முத்தம் கொடுத்ததால் காதுக்குள் காற்றழுத்தம் ஏற்பட்டு விரைவான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இது, அவர் இணையரின் கடுமையான சுவாசத்துடன் இணைந்து, ஒரு காதில் துளை ஏற்பட வழிவகுத்து, காது கேளாமையில் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது என்று அறிக்கை கூறுகிறது.

இது போன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல என்று உள்ளூர் ஊடகங்களால் கூறப்படுகின்றன. 2008ஆம் ஆண்டில், தெற்கு சீனாவைச் சேர்ந்த ஒரு இளம்பெண் தனது காதலன் மீது அதிகப்படியான உணர்ச்சிவசப்பட்டு கொடுத்த முத்தத்தின் போது அவரது செவிப்பறையை சிதைந்து, அவரது செவித்திறனை ஓரளவு இழந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜுஹாய் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய பெண், தனது இடது காது முற்றிலும் செவிடானதில் அப்போது மருத்துவமனைக்குச் சென்றார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் சீன சமூக வலைதளமான Douyin-இல் உள்ள பயனர்களை அதிகம் கவர்ந்துள்ளது எனலாம். இந்த தகவல் அடங்கிய பதிவு தற்போது 10 லட்சம் விருப்பங்களையும், 4 லட்சம் கருத்துகளையும் மட்டும் பெற்றுள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. "உலகம் மிகவும் பெரியது, அது எண்ணற்ற வித்தியாசமான விஷயங்களைக் கொண்டுள்ளது" என்று பயனர் கமெண்ட்டில் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு சீன நெட்டிசன், "காதல் உண்மையில் அதன் வீரியத்தால் காதையே செவிடாக்கும் போல" என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒருவர், "இதனால்தான் நான் ஒரு காதலிக்கவில்லை. இது மிகவும் ஆபத்தானது" என்று கேலியாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்திற்கு 10 லட்சம் பேரை அனுப்ப திட்டமிடும் எலோன் மஸ்க்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More