Home> World
Advertisement

சீனாவின் அங்கீகரிக்கப்படாத COVID-19 தடுப்பூசி திட்டம் குடிமக்களுக்கு எவ்வாறு ஆபத்து ஏற்படுத்துகிறது தெரியுமா?

சீனா தனது சொந்த மக்கள்தொகை மீது அதிகாரத்தை செலுத்துகிறது. சீன குடிமக்கள் தான் உலகின் மிகப்பெரிய அளவில் மருந்துகளை பரிசோதித்துப் பார்க்கும் ஆய்வகத்து எலியாக பார்க்கப்படுகிறார்கள்.

சீனாவின் அங்கீகரிக்கப்படாத COVID-19 தடுப்பூசி திட்டம் குடிமக்களுக்கு எவ்வாறு ஆபத்து ஏற்படுத்துகிறது தெரியுமா?

வுஹான் வைரஸிற்கான (Wuhan virus) தடுப்பூசிக்காக உலகம் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறதுல். ஆனால் இன்னும் ஒரு தடுப்பு மருந்து கூட முழுமையான அங்கீகாரம் பெறவில்லை. ஆனால் சீன குடிமக்களுக்கு கோவிட் நோய்க்கான மருந்துகள் செலுத்தப்படுகிறது. இது தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலாவதாக, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது, இப்போது சீனா தனது திட்டத்தை ஆசிரியர்கள், பல்பொருள் அங்காடி ஊழியர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் மக்களுக்கு தடுப்பூசி போடுவது என விரிவுபடுத்துகிறது.

சீனாவின் தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த மாத தொடக்கத்தில், தடுப்பூசிகள் தன்னிடம் இருப்பதாக சீனா உலகின் முன் காட்சிப்படுத்தியது. இது சர்வதேச அளவில் ஒரு முக்கிய செய்தியை அனுப்புவதற்கான மூலோபாய தந்திர முயற்சி ஆகும்.  வுஹான் வைரஸுக்கு சீனாவிடம் மருந்து இருக்கிறது என்பதை அந்நாடு உலகின் முன் நிரூபிக்க விரும்புகிறது.

சீனாவின் தடுப்பூசிகளுக்கு உலக அளவில் அங்கீகாரமும், ஒப்புதலும் கிடைக்காவிட்டாலும் கூட, இந்த பெருந்தொற்றுக்கான உலகளாவிய தடுப்பூசி பந்தயத்தில் தானே தொடக்க ஆட்டக்காரர் என்ற முத்திரையைப் பதிக்க சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.

முதலாவதாக, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது, இப்போது சீனா தனது திட்டத்தை ஆசிரியர்கள், பல்பொருள் அங்காடி ஊழியர்கள் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்லும் மக்களுக்கு தடுப்பூசி போடுவது என விரிவுபடுத்துகிறது.

இரண்டு இலக்குகளை அடிப்படையாக வைத்து பெய்ஜிங் செயல்படுகிறது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி சீனாவை அறிவியலில் ஒரு வல்லரசாகக் காட்ட ஆர்வமாக உள்ளது.  அதோடு, தடுப்பூசி பந்தயத்தில் வென்றுவிட்டதாக காட்டிக் கொண்டால், வுஹானில் கொரோனா வைரஸ் உருவானதை சீனா மூடிமறைத்தது தொடர்பானசில விமர்சனங்களை சீனாவால் திசை திருப்ப முடியும்.

எனவே சீனா தனது சொந்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடுகிறது, அதுமட்டுமல்லாமல் தடுப்பூசியை உலகின் பிற பகுதிகளுக்கும் வழங்கி வருகிறது. ஓராண்டுக்குள் ஒரு பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகளை   வழங்குவதாக சீன அதிகாரிகள்  உறுதியளித்துள்ளனர், ஆனால் சீனாவின் தடுப்பூசி திட்டம் குறித்து நிபுணர்கள் கடுமையான சந்தேகங்களையும் விமர்சனங்களையும் எழுப்புகின்றனர். 

நோயில் இருந்து பாதுகாக்கும் என்று நிரூபிக்கப்படாத தடுப்பூசியைப் பயன்படுத்தி உலகின் வேறு எந்த நாடும் இவ்வளவு மக்களுக்கு ஊசி போடவில்லை.  

இது உங்களுக்கு பிடித்திருக்கலாம் | september 29 snippets: Top 10 இன்றைய முக்கிய உலகச் செய்திகள்...

இந்த தடுப்பூசியைப் போடுவதால் ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை  சரிபார்க்க சீனா அவர்களைக் கண்காணிக்கிறதா என்பது யாருக்கும் தெரியாது. சீனாவின் தடுப்பூசிகள் தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் அல்லது அதிக தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் அனைவருக்கும் உள்ளது, ஆனால் சீனாவுக்கு அறிவியலை விட அரசியலே முக்கிய நோக்கம் என்பதாக நிபுணர்கள் விமர்சிக்கின்றனர்.  

Zhejiang மாகாணத்தில் உள்ள ஷாயாங் நகரின் அரசு, உள்ளூர் அதிகாரிகளுக்கு ஒரு செய்தியை வெளியிட்டது. அதில், தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு  மேலும் அதிக மக்களை கண்டறியுமாறு   கேட்டுக் கொண்டது. அதன்படி, சாத்தியமான பரிசோதனையாளர்களின் பட்டியலில் பள்ளிகள், மழலையர் பள்ளி மற்றும் மருத்துவ இல்லங்களில் உள்ளவர்கள் இருந்தனர்.

சீனாவின் இதுபோன்ற நகர்வுகள் ஆபத்தானவை, தடுப்பூசி பந்தயத்தை வெல்வதற்கான வெறியில் சீனா தொடர்ந்து தவறு செய்கிறது.  ஆனால் மறுபுறம், வுஹான் வைரஸுக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு, சீனாவின் இந்த எதிர்மறையான இலக்கு உந்துதலைக் கொடுக்கக்கூடும்...  

ஆரோக்கியத்தை அடித்தளமாக்குங்கள் | கல்லீரலைக் கெடுக்கும் உணவுகளும், அவற்றின் பாதிப்புகளும் என்ன தெரியுமா?

Read More