Home> World
Advertisement

Hajj 2022: ஆண்களின் துணையின்றி ஹஜ்ஜுக்கு பெண்களை அனுமதிக்கும் செளதி அரேபியா: சமூக மாற்றம்

Hajj pilgrimage 2022: மாறி வரும் காலத்திற்கு ஏற்ப சற்று வளைந்து கொடுக்கும் சவூதி அரேபியா, ஆண் துணையின்றி பெண்கள் மட்டும் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதித்துள்ளது...

Hajj 2022: ஆண்களின் துணையின்றி ஹஜ்ஜுக்கு பெண்களை அனுமதிக்கும் செளதி அரேபியா: சமூக மாற்றம்

Hajj pilgrimage 2022: தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகள் கடுமையாக குறைக்கப்பட்ட எண்ணிக்கைக்குப் பிறகு, வெளிநாட்டிலிருந்து 850,000 பேர் உட்பட ஒரு மில்லியன் மக்களுக்கு இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.  

ஹஜ் யாத்திரை 2022
கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதற்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் வழக்கம்போல பெருந்திரளான மக்கள் ஹஸ் யாத்திரைக்கு வந்துள்ளனர். ஹஜ் யாத்திரையின் முதல் நாளான புதன்கிழமை (ஜூலை 6) அன்று, செளதி அரேபியாவில் இலட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் புனித தளத்திற்கு சென்று தொழுகை நடத்தினார்கள்.

மெக்காவின் கிராண்ட் மசூதியில், யாத்ரீகர்கள் "தவாஃப்" செய்தார்கள், காபாவை சுற்றி வருவது இஸ்லாமியர்களின் புனித யாத்திரையின் முக்கியமான நடைமுறையாகும். 

 

fallbacks

தடுப்பூசி கட்டாயம்
வெளிநாட்டில் இருந்து 850,000 பேர் உட்பட பத்து லட்சம் ஹஜ் யாத்ரீகளும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி போடாதவர்களுக்கு ஹஜ் யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்று முன்பே அறிவிக்கப்பட்டது.  

ஆனால் ஹஸ் யாத்ரீகர்களில் பெரும்பான்மையானவர்கள் முகக்கவசம் அணியவில்லை. யாத்ரீகர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தாலும், அதை பலர் கடைபிடிக்கவில்லை.  

fallbacks

 வானிலை

வெப்பம் 42 டிகிரி செல்சியஸாக உயர்ந்ததால், பல யாத்ரீகர்கள் வெயிலில் இருந்து பாதுகாக்க குடை பிடித்தபடி நடந்தனர். இஸ்லாம் மதத்தில் ஹஜ் யாத்திரை புனிதக்கடமையாக கடைபிடிக்கப்படுகிறது.

இஸ்லாமியர்களின் புனிதமான நகரங்களான மெக்கா மற்றும் மதீனாவில் 23 மருத்துவமனைகள் மற்றும் 147 சுகாதார மையங்களை தயார்நிலையில் வைத்திருப்பதாக செளதி அரேபியாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

fallbacks
 
பாதுகாப்பு சவால்
ஹஜ் புனித யாத்திரையில் பாதுகாப்பு சவால்களும் உள்ளன. 2015ம் ஆண்டு ஹஜ் புனித யாத்திரையின்போது ஏற்பட்ட நெரிசலால் சுமார் 2,300 பேர் உயிரிழந்தனர்.

ஐந்து நாட்கள் சடங்குகள்

இந்த யாத்திரையானது இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மக்கா மற்றும் மதினாவில் ஐந்து நாட்களில் முடிக்கப்படும் தொடர்ச்சியான மதச் சடங்குகளை உள்ளடக்கியது. 

ஹஜ் யாத்திரையை நடத்துவது என்பது செளதி அரேபியாவுக்கு மதிப்பு வாய்ந்த விஷயம் ஆகும். ஹஜ் யாத்திரை செல்ல ஒரு நபருக்கு குறைந்தபட்சம் $5,000 செலவாகும், ஹஜ் யாத்திரையின் மூலம் செளதி அரேபியாவுக்கு அந்நிய செலாவணி வரத்தும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | மெக்காவில் கொரோனாவுக்கு மத்தியில் பாதுகாப்பான ஹஜ் யாத்திரை

சாதாரணமாக ஒரு ஆண்டு ஹஜ் யாத்திரை மூலம் பில்லியன் டாலர்கள் வருவாயை சவூதி அரேபியா ஈட்டுகிறது. 

சமூக மாற்றம்
செளதி அரேபியாவில் மனித உரிமை மீறல்கள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதான வரம்புகள் குறித்து தொடர்ந்து புகார்கள் இருந்தாலும், தற்போது பல மாற்றங்களும் செளதி அரேபியாவில் சாத்தியமாகியுள்ளது. 

ஆண்களின் துணையின்றி ஹஜ்ஜுக்கு பெண்களை அனுமதிக்கும் அரசின் முன்னெடுப்பு பரவலாக வரவேற்பை பெற்றிருக்கிறது. கின்றது, இது கடந்த ஆண்டு கைவிடப்பட்டது.

மேலும் படிக்க | இந்த நாட்டு இஸ்லாமியர்கள் 2022ல் Hajj யாத்திரைக்கு செல்ல மாட்டார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More