Home> World
Advertisement

நைஜீரியா துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி! பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்

Gun Shooting: நைஜீரியாவின் ஒரு கிராமத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்

நைஜீரியா துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் பலி! பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்

நைஜீரியாவில் ஒரு கிராமத்தில் நடைபெற்ற இரண்டு தாக்குதல்களில் துப்பாக்கிதாரிகள் குறைந்தது 50 பேரைக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச்சூடு ஏப்ரல் 6ம் தேதியன்று நடைபெற்றது. ’உமோகுடி’ (Umogidi village) என்ற கிராமத்தில் முதல் நாள் நடைபெற்ற மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்ட நிலையில், அடுத்த நாள் நடைபெற்றத் தாக்குக்தலில் 47 பேர் கொல்லப்பட்டனர்.

அதிர்ச்சி தரும் இந்த படுகொலை நடந்த Otukpo உள்ளூர் அரசாங்கத்தின் தலைவர் Ruben Bako, Benue மாகணத்தின் உமோகுடி கிராமத்தில் நடைபெற்றா தாக்குதல்களைப் பற்றி தகவல் தெரிவித்தார். 

பென்யூ மாகாண காவல்துறை இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியதுடன், தாக்குதல் நடத்தியவர்கள் சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்தானர். பலியானவர்களில் ஒரு போலீஸ் அதிகாரியும் அடங்குவார்.

மேலும் படிக்க | 32 ஆண்டுகளில் 100க்கும் அதிகமானவர்களை கல்யாணம் செய்த ‘திருமண மார்கண்டேயன்’

தாக்குதல்களின் நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை, இருப்பினும் இரண்டு தாக்குதல்களுக்கும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளதாக அதிகாரிகள் நம்புகிறார்கள். இந்தத் தாக்குதல்களுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், வடக்கு-மத்திய நைஜீரியாவில் நிலத் தகராறுகள் தொடர்பான தாக்குதல்களாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுகிறது.

இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளுடன் உள்ளூர் கால்நடை மேய்ப்பர்களுக்கு மோதல் இருந்துவந்ததால், இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கு முன்பகை காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த பிராந்தியத்தில்,ஃபுலானி வம்சாவளியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள் கால்நடைகளை மேய்த்து வாழ்ந்துவருகின்றனர். அவர்கள், தங்கள் பண்ணைகளில் கால்நடைகளை மேய்த்து, விளைபொருட்களை அழிப்பதாக அந்தப் பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் படிக்க | ஹோட்டலில் மெதுவாக சாப்பிட்டால் ரூ. 10 ஆயிரம் அபராதம்

நாடு விடுதலை அடைந்த பிறகு, அந்தப் பகுதி மேய்ச்சல் பாதைகளாக வரையறுக்கப்பட்டிருப்பதாக கால்நடை மேய்ப்பர்கள் கூறி வருவதால், தகராறு தொடர்ந்து நீடிக்கிறது. 

நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் விவசாய சமூகங்கள் மற்றும் நாடோடி கால்நடை மேய்ப்பர்களுக்கு இடையே பல தசாப்தங்களாக நீடித்த மோதல்களில், "நைஜீரியாவின் உணவுக் கூடை" என்று குறிப்பிடப்படும் பென்யூ மாநிலம் ஒன்றாகும்.

இந்த அடிக்கடி ஏற்படும் மோதல்களால், பல ஆண்டுகளாக மாநிலத்தின் விவசாய விளைச்சல் குறைந்துள்ளது. அந்தப் பிராந்தியத்தில், மக்களின் பசிக்கு காரணமாகவும், மக்களை ஏழைகளாகவும் வைத்திருக்கும் நிலத் தகராறின் மற்றொரு கோர முகம் இது என மக்கள் வருத்தப்படுகின்றனர்.  

மேலும் படிக்க |  அதிர்ச்சி சம்பவம்! தன்னை கொல்ல வந்த கசாப்பு கடைக்காரரை போட்டுத் தள்ளிய பன்றி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More