Home> World
Advertisement

டாட்டூ சாதனை... உடல் முழுவதும் டாட்டூ குத்திக் கொண்டுள்ள தம்பதிகள்!

சமீப வருடங்களில் டாட்டூ (Tattoo) என்னும் பச்சை குத்திக்கொள்வது அதிகரித்துவிட்டது. இந்த மோகம் இளைஞர்களிடையே அதிகம் காணப்பட்டு வருகிறது. ஆனால் மூத்த தம்பதிகள் கூட இந்த மோகத்தில் வீழ்ந்திருப்பது ஆச்சர்யத்தை கொடுப்பதாக உள்ளது

டாட்டூ சாதனை... உடல் முழுவதும் டாட்டூ குத்திக் கொண்டுள்ள தம்பதிகள்!

Guinness Book Of World Record: சமீப வருடங்களில் டாட்டூ (Tattoo) என்னும் பச்சை குத்திக்கொள்வது அதிகரித்துவிட்டது. இந்த மோகம் இளைஞர்களிடையே அதிகம் காணப்பட்டு வருகிறது. ஆனால் மூத்த தம்பதிகள் கூட இந்த மோகத்தில் வீழ்ந்திருப்பது ஆச்சர்யத்தை கொடுப்பதாக உள்ளது. இந்த மூத்த ஜோடி உடல் முழுவதும் பச்சை குத்திகொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக இவர்கள் இதை செய்து வருகின்றனர். இப்போது பச்சை குத்துவது தொடர்பாக கின்னஸ் புத்தகத்தில் இவரது பெயர் பதிவாகும் சூழல் உருவாகியுள்ளது. அவர்களது உடலில் 90 சதவீதம் பச்சை குத்தப்பட்டுள்ளது.

உடல் முழுவதும் பச்சை குத்தப்படுகிறது!

தி சன் பத்திரிகையின் அறிக்கையின்படி, அவர்களின் பெயர்கள் ஹெல்ம்கே வயது 81 மற்றும் சார்லோட் குட்டன்பெர்க் வயது 74. அவர் பெயரில் ஒரு தனித்துவமான உலக சாதனை உள்ளது. இதில் 2000 மணி நேரம் நாற்காலியில் அமர்ந்து உடல் முழுவதும் பச்சை குத்தி சாதனை படைத்துள்ளார். நிபந்தனை என்னவென்றால், சார்லோட்டின் முகத்தின் ஒரு பகுதி மற்றும் அவரது கைகளில் மட்டும் பச்சை குத்தப்படவில்லை, உடலின் மற்ற பகுதிகளில் பச்சை குத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Turkey Earthquake 248 மணி நேரத்திற்கு பிறகும் உயிருடன் மீட்கப்படும் அதிர்ஷ்டசாலிகள்

சுமார் 2000 மணி நேரம் நாற்காலியில் கழித்தார்

இவர் இது குறித்து கூறுகையில், நான் என்னை நகரும் கலைக்கூடமாக கருதுகிறேன் என்று கூறுகிறார். சிலர் கலையை வாங்கி சுவர்களில் தொங்கவிடுகிறார்கள், நான் அதை என் உடலில் வைத்திருக்கிறேன். மேலும் நான் அதில் பெருமைப்படுகிறேன் என்கிறார். சார்லட் குட்டன்பெர்க் மற்றும் அவரது கணவர் சார்லஸ் ஹெல்ம்கே இருவரும் நாற்காலியில் சுமார் 2000 மணிநேரம் செலவழித்து, டாட்டூ குத்திக் கொண்டுள்ளனர். உடலில் பல்வேறு வண்ண வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.

டாட்டூ பிரியர்களான தம்பதிகள்

சார்லோட் தனது 57 வயதில் தனது முதல் பச்சை குத்தினார். அதன்பிறகு இந்த தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது 76 வயதில், அவரது உடலில் 98 சதவீதத்திற்கும் அதிகமான பச்சை குத்தல்கள் உள்ளன.  டாட்டூ பிரியரான சார்லோட்டுக்கு வாழ்க்கைத் துணையும் டாட்டூ பிரியராக கிடைத்ததுதான் சிறப்பு. சார்லஸ் தனது 81 வயதில் தனது உடலின் 97 சதவீதத்திற்கும் மேலாக பச்சை குத்தியுள்ளார். சார்லஸ் தனது 18 வயதில் தனது முதன் முதலில் பச்சை குத்தினார்.

மேலும் படிக்க | 5,000 ஆண்டுகள் பழமையான ஹோட்டலை கண்டுபிடித்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்!

மேலும் படிக்க | எகிப்தின் 4300 ஆண்டு பழமையான தங்க மூலாம் பூசப்பட்ட மம்மி கண்டுபிடிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More