Home> World
Advertisement

Cocaine Seize: ஆப்பிரிக்க கடற்கரையில் 6 டன் கோகோயின் பறிமுதல்

ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையில் சென்றுக் கொண்டிருந்த ஒரு சரக்குக் கப்பலில் இருந்து 1 பில்லியன் யூரோக்கள் (1.2 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள 6 டன் கோகோயின் பறிமுதல் செய்ததாக பிரெஞ்சு ராணுவம் தெரிவித்துள்ளது.

Cocaine Seize: ஆப்பிரிக்க கடற்கரையில் 6 டன் கோகோயின் பறிமுதல்

ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையில் சென்றுக் கொண்டிருந்த ஒரு சரக்குக் கப்பலில் இருந்து 1 பில்லியன் யூரோக்கள் (1.2 பில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள 6 டன் கோகோயின் பறிமுதல் செய்ததாக பிரெஞ்சு ராணுவம் தெரிவித்துள்ளது.

இது பிரான்சின் கடற்பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய போதைப்பொருள் பறிமுதல் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த மிகபெரிய அளவிலான கடத்தல் போதைப்பொருட்கள் சிக்கியுள்ளதாக பிரெஞ்சு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு பயணித்த சரக்குக் கப்பலில் போதைப் பொருட்கள் இருந்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான பொருட்கள் கடத்தப்படுவது தொடர்பான உளவுத் தகவல்கள் கிடைத்ததை அடுத்து, கினியா வளைகுடாவில் (Gulf of Guinea) பிரெஞ்சு ரோந்து படையினர் ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Also Read | வாட்ஸ்அப் மூலம் தேர்தல் பிரசாரம் செய்யலாமா?  Madras HC சொல்வது என்ன?  

ஞாயிறன்று காலை ஹெலிகாப்டரில் வந்த ரோந்துப்படையினர் சரக்கு கப்பலை பிடித்தனர். 
பறிமுதல் செய்யப்பட்ட கோகோயினை கொண்டு செல்வதற்கு ராணுவத்தின் உதவி பெறப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் சின் கோரிம்பே பணித்திட்டத்தின் (Corymbe mission) ஒரு பகுதி ஹெலிகாப்டர் கேரியர் ஆகும். இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு இந்த கடத்தல் பாதை எது மூலமாக அடிக்கடி போதைப்பொருட்கள் கடத்தப்படுவதால் ரோந்துப் பணிகள் தீவிரமாக நடைபெறுவதும் வழக்கம்.
இருந்தபோதிலும், மிகப்பெரிய அளவிலான கோகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது சர்வதேச அளவில் கவலைகளை எழுப்பியுள்ளது.

Also Read | முதல் ODI போட்டியில் வென்ற இந்தியாவின் பெருமைமிகு தருணங்கள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More