Home> World
Advertisement

ஹைத்தி அதிபர் ஜோவெனெல் மயிஸ் படுகொலை தொடர்பாக 4 பேர் கைது

ஹைத்தி அதிபரும் சர்வாதிகாரியுமான ஜோவெனெல் மயிஸ், (Jovenel Moise) அவரது இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டது அந்நாட்டில் மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது.  அதிபரின் மனைவியான மார்டினி மொய்சி மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹைத்தி அதிபர் ஜோவெனெல் மயிஸ் படுகொலை தொடர்பாக 4 பேர் கைது

ஹைத்தி அதிபரும் சர்வாதிகாரியுமான ஜோவெனெல் மயிஸ், (Jovenel Moise) அவரது இல்லத்தில் படுகொலை செய்யப்பட்டது அந்நாட்டில் மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது.  அதிபரின் மனைவியான மார்டினி மொய்சி மீதும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஏற்கனவே ஏழை நிலையில் உள்ள அந்த நாட்டில் அரசியல் மற்றும் சமூக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. இதை அடுத்து அந்நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை அதிபர் ஜோவெனெல் மொய்சியை அவரது தனியார் இல்லத்தில் கொலை செய்த வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில், நான்கு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்

அதிபர் படுகொலையில், கொலம்பியாவை சேர்ந்த 26 பேர்,  அமெரிக்காவை சேர்ந்த நான்கு பேர் ,  சம்பந்தப்ப்ட்டிருப்பதாக. அந்நாட்டு போலீஸார் கூறுகின்றனர்.  அமெரிக்காவில் உள்ள ஹைத்தியின் தூதர் பூச்சிட் எட்மண்ட், 53 வயதான மொய்சி கொல்லப்பட்டது, ஒரு திட்டமிட்ட சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக வெளிநாட்டு பயங்கரவாதிகள்  நடத்திய படுகொலை எனக் கூறியுள்ளார். 

இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் , இது குறித்து கூறுகையில், அதிபரியின் படுகொலை குறித்து உலகத் தரம் வாய்ந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறினார்.  இந்த ஆண்டு இறுதியில் திட்டமிடப்பட்ட தேர்தல்கள் சரியான நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ALSO READ | Watch: துபாய் துறைமுகத்தில் குண்டுவெடிப்பு: தீவிரவாத தாக்குதலா? போலீஸ் தீவிர விசாரணை

நாட்டின் தலைநகரான போர்ட் ஓ பிரின்ஸில், பிரிவு வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு ஒரு முக்கிய காரணம் பணவீக்கம். நாட்டில் 60 சதவீத மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு டாலர்கள் மட்டுமே சம்பாதிக்கிறார்கள். ஹைத்தி ஒரு ஏழை நாடாகும், நாட்டிற்குள் தொடர்ந்து உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. 

ஹைட்டி நாட்டில் சர்வாதிகாரம் மற்றும் சதித்திட்டங்கள் என்பது தொடர்கதையாகும். அந்நாட்டில் ஜனநாயகம் ஒருபோதும் முழுமையாக வேரூன்றவில்லை. ஹைட்டி அதிபர் மொய்ஸின் ஐந்தாண்டு பதவிக்காலம் பிப்ரவரி 7 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் பதவியை விட்டு விலகவில்லை. அவர் பதவி விலகவேண்டும் என்று கோரி எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டங்களை நடத்திவந்தன. 

அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்த அதிபர் மீது பொதுமக்களின் கோபம் அதிகரித்து வந்தது.  ​​ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தி வந்தனர். தற்போது அதிபர் மாளிகையில் தாக்குதல் நடத்தப்பட்டு அதிபர் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | July 07: இன்றைய தினம் வரலாற்றில் பதிவு செய்த முக்கிய நிகழ்வுகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More