Home> World
Advertisement

எகிப்தின் தொலைந்து போன, 3000 ஆண்டு கால பழமையான “தங்க நகரம்” கண்டுபிடிப்பு

தெற்கு எகிப்தில் நைல் நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள லக்சர் (Luxor) என்னும் இடத்தில் பழங்கால நகரத்தின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

எகிப்தின் தொலைந்து போன, 3000 ஆண்டு கால பழமையான “தங்க நகரம்” கண்டுபிடிப்பு

தெற்கு எகிப்தில் நைல் நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள லக்சர் (Luxor) என்னும் இடத்தில் பழங்கால நகரத்தின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தங்க நகரம் என்ற அழைக்கப்படும் இந்த நகரம் 3,000 ஆண்டுகளுக்கும் மேலானது என்று கூறப்படுகிறது.

தொலைந்து போன தங்க நகரத்தை கண்டுபிடிக்கும் பணியை புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜாஹி ஹவாஸ் தலைமையிலான அகழ்வாராய்ச்சி குழு, எகிப்தின் தொல்பொருளுக்கான கவுன்சிலுடன் இணைந்து மேற்கொண்டது.

இந்த நகரம் ‘ஏடன்’ (‘Aten) அல்லது ‘தொலைந்து தங்க நகரம்’ (lost golden city) என்று அழைக்கப்படுகிறது. இது 18 ஆம் அரச வம்சத்தின் ஒன்பதாவது மன்னரான மூன்றாம் அமென்ஹோடெப் மன்னனின் ஆட்சிக்கு முந்தைய நகரம் ஆகும், அவர் 1391 முதல் கிமு 1353 வரை எகிப்தை ஆண்டார்.

ALSO READ | ராணி எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்

 

மூன்றாம் அமென்ஹோடெப் (Amenhotep III) மன்னர் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார் என்று கூறப்படுகிறது. செல்வ செழிப்பு மிகுந்த அவரது ஆட்சியில், மெம்னோனின் கொலோசி உட்பட லக்ஸருக்கு அருகில், அவரது மற்றும் அவரது மனைவியின் இரண்டு பிரமாண்டமான கல் சிலைகள் இருந்தன. அவரது இராஜ்ஜியம் மேற்கு ஆசியாவின் யூப்ரடீஸ் முதல் நவீன சூடான் வரை நீண்டிருந்தது.

அமன்ஹோடெப் III இன் ஆட்சிக்காலத்திற்கு பிறகு துட்டன்காமூன் (Tutankhamun ) மற்றும் ஐ (Ay) என்பவர்கள்  தொடர்ந்து ஆட்சி செய்தனர்.

அகழ்வாராய்ச்சியின் போது, மோதிரங்கள் போன்ற நகைகள், வண்ண மட்பாண்ட பாத்திரங்கள், தாயத்துக்கள் மற்றும் மூன்றாம் மன்னர் அமன்ஹோடெப்பின் முத்திரைகள் தாங்கிய மண் செங்கற்களையும் கண்டுபிடிக்கப்பட்டன. அகழ்வாராய்ச்சியின் போது பல நிர்வாக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

தலைநகர் கெய்ரோவிலிருந்து 500 கி.மீ தெற்கே லக்சருக்கு அருகிலுள்ள ராம்செஸ் III மற்றும் அமன்ஹோடெப் III கோயில்களுக்கு இடையே இந்த குழு, 2020 செப்டம்பரில் அகழ்வாராய்ச்சி தொடங்கியது.

எகிப்தின் வரலாற்றிலே மிக முக்கிய கண்டுபிடிப்பாக கருதப்படும் துட்டன்காமன் கல்லறையை அடுத்து தங்க நகரம் கண்டுபிடிப்பு முக்கிய இடத்தை பெறுகிறது. 

ALSO READ | பிரதமர் என்றால் விதிவிலக்கா என்ன; அதிரடி காட்டிய நார்வே போலீஸ் 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More