Home> World
Advertisement

காற்றில் பறந்த ஜி ஜின்பிங்-ன் வாக்குறுதிகள்… உலக மன்றத்தில் சீனாவின் நிலை என்ன ….!!!

பல நாடுகளுடன் சர்ச்சை, கொரோனா பரவல், ஆதிக்க மனப்பான்மை, எல்லையை விரிவு படுத்தும் பேராசை ஆகியவற்றால், உலக அரங்கின் சீனா தனது செல்வாக்கை இழந்து விட்டது

காற்றில் பறந்த ஜி ஜின்பிங்-ன் வாக்குறுதிகள்… உலக மன்றத்தில் சீனாவின் நிலை என்ன ….!!!

சீனா உலக மன்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் சீனா உலகில் ஆதிக்கம் செலுத்தும் எனவும் சீன அதிபர் ஜீ ஜிங்க்பிங் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அண்டை நாடுகளுடன் சர்ச்சை, மோசமான ராஜ தந்திரம் மற்றும் Covid-19 பெருந்தொற்று ஆகியவை காரணமாக, உலக மன்றத்தில் சீனாவின் நிலையை மிகவும் பாதித்துள்ளது. தனது துரோக செயல்களுக்கான பலனை அனுபவித்து வருகிறது.

ALSO READ | $800 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களை அழித்த மியான்மர்

புது தில்லி (New Delhi): சீனாவின் (China) அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) தனது இரண்டாவது பதவி காலத்தில் பதவி ஏற்றுக் கொண்ட போது, சீனா தற்சார்பு அடைந்து விட்டது, வளமான நாடாக உள்ளது என்றும் சீனா உலக நாடுகள் மத்தியில் வலுவாக முன்னேறிச் செல்லும் எனவும் வாக்களித்தார். ஆனால், தனது எல்லைகளை விரிவுபடுத்தும் பேராசையில் அண்டை நாடுகளுடன் சர்ச்சை, கொரோனவை (corona) பரப்பியது ஆகியவை காரணமாக, உலகமே சீனாவிற்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளது.  சீனா மீது அனைத்து நாடுகளும் வெறுப்பிலும் கோபத்திலும் உள்ளன. சுமார் பத்து நாடுகளுடன் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் சீனா உடன் வர்த்தக போர் புரிந்து வருகிறது. சீனாவின் அண்டை நாடுகளை பொருத்தவரை, அதன் ஆக்கிரமிப்பு கொள்கைகளால், அனைத்து நாடுகளுடன் பிரச்சனை நிலவுகிறது. அதை தவிர சீனா, தென் சீன கடலில் ஆதிக்கம் செலுத்தும் நினைப்பதால், அங்கு பதற்றம் நிலவுகிறது.

 சீனாவின் (China) எல்லையில் உள்ள சிறிய நாடுகளுக்கு அதிக கடன் கொடுத்தும் அதனை அடிமைபடுத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அந்த நாடுகளை மிரட்டி பணிய வைக்கிறது.

இது தவிர கொரோனா பரவல் தொடர்பாக ஆரம்பம் முதலே, வெளிப்படைத் தன்மையை கடைபிடிக்காத காரணத்தினால், அதன் மீதான சந்தேகம் வலுத்து வருகிறது. தொடக்க காலத்தில், வுஹானில் இருந்து பரவிய வைரஸ் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என சுமார் 60 நாடுகள் கோரின. இப்போது 100 நாடுகள் இந்த பட்டியலில் இணைந்துள்ளன.

ALSO READ | இந்தியாவிற்கு அமெரிக்க இராணுவம் அனுப்பப்படுமா…. Mike Pompeo சூசக தகவல் !!!

சீனா தான் ஒரு வல்லரசு  என்ற எண்ணத்தில் உள்ளது.  உலகளாவிய நிறுவனங்களை கையகப்படுத்த திட்டம் தீட்டி வருகிறது. உலகை தனது கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என்ற பேராசையில்  உள்ளது. ஆனால், அதிகரித்து வரும் சர்ச்சைகள்,  துரோக செயல்கள், சிறிய நாடுகளை அடிமைபடுத்தும் எண்ணம் ஆகியவற்றால், உலக அரங்கில் அனைத்து நிலையிலும் தாக்குதலுக்கு சீனா உள்ளாகியுள்ளது.  உலகம் முழுவதும் தனது ஆட்சியை நிலைநாட்டும் பிஜிங் கனவு ஒரு போதும் நிறைவேறாது என்பதையே இது  உணர்த்துகிறது.

மொழியாக்கம்: வித்யா கோபாலகிருஷ்ணன்.

Read More