Home> World
Advertisement

சீன கொள்கை தொடர்பாக ஜோ பைடனுக்கு அழுத்தம் கொடுக்கும் ட்ரம்ப் ஆதரவாளர்கள்..!!!

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகளுக்கு  சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று ஜான் ராட்க்ளிஃப் கூறினார்.

சீன கொள்கை தொடர்பாக ஜோ பைடனுக்கு அழுத்தம் கொடுக்கும் ட்ரம்ப் ஆதரவாளர்கள்..!!!

அமெரிக்காவில் அதிகாரப் பரிமாற்றம் நிலை உள்ள நிலையில், ​​ட்ரம்ப் நிர்வாகத்துடன் தொடர்புடைய உளவுத்துறை அமைப்பான 'மைண்ட் கேம்' (Mind game) தனது நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பொறுப்பேற்க உள்ள ஜோ பிடன் நிர்வாகமும் சீனாவுக்கு எதிரான தற்போதைய அமெரிக்காவின் நிலைப்பாட்டை தொடர வேண்டும் என்ற அழுத்தத்தை உருவாக்க, டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உயர் புலனாய்வு அதிகாரி இப்போது ஊடகங்களை நாடியுள்ளார்.

தேசிய புலனாய்வு இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் வலதுசாரி செய்தித்தாளான தி வால் ஸ்ட்ரீட் ஜெர்னலில் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். சீனா இப்போது அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிசிக்க வெளிப்படையாக தயாராகி வருவதாக அதில் அவர் எச்சரித்துள்ளார். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகளுக்கு  சீனா மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்று ஜான் ராட்க்ளிஃப் கூறினார்.

அமெரிக்க  (America) நாடாளுமன்றத்தின், பல உறுப்பினர்களையும், தனது உறுப்பு நாடுகளையும் தங்கள் பக்கம் பேச வைத்து,  சீனா இந்த ஆண்டு ஒரு பிரச்சாரத்தை நடத்தியதாக ராட்க்ளிஃப் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

ராட்க்ளிஃப்பிற்கு முன்னதாக, டிரம்ப் நிர்வாகத்தின் பல மூத்த அதிகாரிகளும் இதுபோன்ற எச்சரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அவர்களில் சிலர் சீனாவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையையும் ஆதரித்தனர். இவை அனைத்தும் வரவிருக்கும் பிடன் நிர்வாகத்தின் கொள்கை தொடர்பாக அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சிகள் என கருதப்படுகின்றன.

ALSO READ | தலைவிரித்தாடும் தானியபற்றாகுறை; அரிசிக்காக இந்தியாவிடம் கை ஏந்தும் சீனா..!!!

ராட்க்ளிஃப்பின் தனது கட்டுரையில்,  சீனாவை உலகின் ஆதிக்க இராணுவ சக்தியாக மாற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒரு "ஆக்கிரமிப்பு திட்டத்தை" தயாரித்துள்ளார் என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்க இராணுவ தொழில்நுட்பத்தை திருடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

 ஜோ பிடனின் (Joe Biden) வெளியுறவுக் கொள்கைக் குழு சீனாவின் சவால்களை  நன்கு அறிந்துள்ள அதே நேரத்தில், டிரம்பின் நிலைப்பாடு சீனாவுக்கு மறமுகமாக பயனளித்தது என்று நம்புகிறது. அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் கலந்தாலோசிக்காமல் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததால் இவ்வாறு நேர்ந்தது என்றும் ஜோ பிடனின் குழு கருதுகிறது. 

இந்நிலையில் ராட்க்ளிஃப்பிற்குப் பதிலாக தேசிய புலனாய்வுப் பிரிவின் அடுத்த இயக்குநராக அவ்ரில் ஹேன்ஸை, ஜோ பிடென் நியமித்துள்ளார். அவரைச் சந்தித்த செனட்டில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சக் ஷுமர் கூறுகையில், சீனாவுக்கு (China) எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுக்க நான் பிடென் அணியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். ஆனால் இந்த நிலைப்பாடை அமெரிக்கா மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும் என்றார். 

செமிகண்டக்டர்கள், குவாண்டம் கம்ப்யூட்டிங், எரியாற்றல் போன்ற தொழில்நுட்பங்களில் அமெரிக்கா உலகை வழிநடத்த வேண்டும்  என அவர் மேலும் கூறினார்

அதே சமயத்தில், சில துறைகளில் சீனாவுடன் நெருக்கமாக பணியாற்ற அமெரிக்கா ஆர்வமாக உள்ளது என்று பிடென் கூறியுள்ளார். காலநிலை மாற்றம் மற்றும் வட கொரியா தொடர்பான பிரச்சினைகள் போன்ற விஷயங்களில், சீனாவுடன் பணியாற்ற வேண்டிய தேவை உள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அதிபர்,  தனது நாடுகளுடன் இணைந்து,  5 ஜி, அறிவுசார் சொத்து திருட்டு, ஹாங்காங்கில் ஜனநாயகத்தை அடக்குதல் மற்றும் ஆசிய கடல் பகுதிகளில் சீனா ஆதிக்கம் போன்ற விஷயங்களில் முடிவு எடுப்பார் என்று பிடனின் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவை நோக்கிய பிடன் நிர்வாகத்தின் உண்மையான கொள்கை என்னவாக இருக்கும் என்று இப்போது ஊகங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், அதிபர் டிரம்பின் சீனா கொள்கையிலிருந்து விலகக்கூடாது என்று அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள பைடன் மீது டிரம்ப் (Donald Trump)  நிர்வாக அதிகாரிகள் அழுத்ததை அதிகரித்துள்ளனர் என்பது தெளிவாகிறது. 

ALSO READ | மீனவர் கையில் சிக்கிய புதையல்... திமிங்கிலத்தின் வாந்திக்கு ₹25 கோடியாம்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More