Home> World
Advertisement

Sex Crimes: 1,075 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற மதத்தலைவர் யார் தெரியுமா?

பாலியல் குற்றங்களுக்காக 1,075 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட மதத்தலைவருக்கு 1000த்துக்கும்  மேற்பட்ட பெண் தோழிகள் இருப்பதாக  நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவரது வீட்டில் 69,000 கருத்தடை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன... தான் அசாதரணமான சக்தி படைத்தவர் என்று பெருமை பேசும் மதத்தலைவர் இவர்...

Sex Crimes: 1,075 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற மதத்தலைவர் யார் தெரியுமா?

பாலியல் குற்றங்களுக்காக 1,075 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட செய்தியை இதுவரை எங்கேயாவது கேட்டதுண்டா? இது உண்மையான நிகழ்வு, அண்மை தீர்ப்பு. அதிலும் மதத்தலைவர் ஒருவர் பாலியல் குற்றங்களுக்காக கடும் தண்டனை பெறுவது ஆச்சரியமாக இருக்கிறதா? பாலியல் குற்றம் தான் பிரதானமாக சுமத்தப்பட்டது என்றாலும், அவர் மீதான குற்றப்பட்டியல் நீளமானது. 

இது துருக்கி நாட்டின் மதத்தலைவரின் விவகாரம். Adnan Oktar என்ற மதத் தலைவருக்கு 10 தனித்தனியான குற்றங்களுக்காக இஸ்தான்புல்லில் உள்ள நீதிமன்றம் 1,075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக துருக்கி (Turkey) நாட்டின் நீதித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.  

அட்னன் ஒக்டர் (Adnan Oktar) வழிபாட்டு அமைப்பின் தலைவராக உள்ளார், இந்த அமைப்பை குற்றவியல் அமைப்பாக நீதிமன்றம் (Court) கூறிவிட்டது. 64 வயதான ஒக்டார் மற்றும் அவரைப் பின்தொடர்பவர்களின் இடங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் டஜன் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Also Read | பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ‘மூலிகை வயாகரா’

பாலியல் வன்கொடுமை (Sexual Abuse), சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்தல், மோசடி குற்றச்சாட்டுகள் ஒக்டார் மீது சுமத்தப்பட்டது. அதோடு, அரசியல் மற்றும் ராணுவத்தில் உளவு பார்க்க முயற்சி செய்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. 

ஒக்டார் மேலான குற்றச்சாட்டுகளை விசாரித்துவரும் காவல்துறையினர் 236 சந்தேக நபர்களை விசாரித்து, அவர்களில் 78 பேர் கைது செய்துள்ளதாக துருக்கியின் அதிகாரப்பூர்வ  செய்தி நிறுவனம் Anadolu தெரிவித்துள்ளது.
 
ஒக்டர் பழமைவாத கருத்துக்களைப் பிரசங்கம் செய்யும் பழமைவாதத் தலைவர் என்பது அவரது ஒரு அவதாரம். மற்றொருபுறம், பெண்கள் புடைசூழ தொலைகாட்சி நிகழ்ச்சியில் நடனமாடுவார். அப்போது, தன்னை சுற்றி உள்ள அணங்குகளை "பூனைக்குட்டிகள்" என்று அவர் செல்லமாக அழைத்தார். அந்த பெண்களில் பலர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர்கள் என்பது தொலைகாட்சி நிகழ்ச்சியில் அப்பட்டமாக தெரிந்தது. 

Also Read | பாலியல் நெருக்கத்தை குறைக்கும் பொதுவான காரணங்கள் என்ன தெரியுமா?

டிசம்பர் மாதம் நீதிமன்ற விசாரணையின்போது, தனக்கு 1,000 தோழிகள் இருப்பதாக தலைமை நீதிபதியிடம் ஒக்டர் தெரிவித்தார். "பெண்களுக்காக என் இதயத்தில் அன்பு நிரம்பி வழிகிறது. அன்பு ஒரு மனித குணம். இது ஒரு முஸ்லிமின் தரம்" என்று அக்டோபரில் நடந்த மற்றொரு விசாரணையில் ஒக்டர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

அதுமட்டுமல்ல, "நான் அசாதாரணமாக சக்திவாய்ந்தவன்." என்றும் அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார். 1990 களில் ஒக்டர் தலைவராக இருந்த மத அமைப்பு பல பாலியல் முறைகேடுகளில் சிக்கியது. அப்போது    ஒக்டர் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.  

2011 இல் அவரது A9 television தொடர் ஆன்லைனில் (Online) ஒளிபரப்பாகத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு துருக்கியின் மதத் தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பினார்கள். ஒக்தார் தன்னையும் பல பெண்களையும் பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக  விசாரணையில் ஒரு பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

Also Read | உடல் பருமன் பாலியல் ஆரோக்கியத்தை பாதிக்கும், சிறந்த தாம்பத்திய வாழ்க்கைக்கு Tips

தான் பாலியல் பலாத்காரம் செய்த சில பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகளை அவர் கட்டாயமாக கொடுப்பார் என்றும் அந்த பெண் விசாரணையில் தெரிவித்தார். தனியுரிமை காரணங்களுக்காக அந்த பெண்ணின் பெயருக்கு பதிலாக CC என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Oktar வீட்டில் 69,000 கருத்தடை மாத்திரைகள் இருந்தது. அது குறித்து போலீசார் (Police) விசாரித்தபோது சருமப் பிரச்சனைகள் மற்றும் மாதவிடாய் முறைகேடுகளுக்கு சிகிச்சையளிக்க கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தியதாக கூறினார்.
 
2016 ல் துருக்கியில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியைத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அமெரிக்காவைச் (America) சேர்ந்த முஸ்லீம் போதகர் ஃபெத்துல்லா குலன் (Muslim preacher Fethullah Gulen) தலைமையிலான குழுவுடன் ஒக்டருக்கு தொடர்பு இருக்கிறதா என்ற  கோணத்திலும் விசாரணை நடைபெற்றது. ஆனால், ஃபெத்துல்லா குலன் தலைமையிலான குழுவுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஒக்டர் கூறுகிறார்.  

Also Read | அதிசயம் ஆனால் உண்மை! கிட்டத்தட்ட 5 கோடியை விட்டுக் கொடுத்த மருத்துவர்

Darwinian theory என்ற பரிணாமக் கோட்பாட்டை நிராகரிக்கும் படைப்பாளி ஓக்டர் என்பதும், ஹருன் யஹ்யா என்ற பெயரில் "தி அட்லஸ் ஆஃப் கிரியேஷன்" ("The Atlas of Creation") என்ற 770 பக்க புத்தகத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! 

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR   

Read More