Home> World
Advertisement

தாலிபான்களை பார்த்து பயப்பட வேண்டாம் - துப்பாக்கி முனையில் செய்தி வாசிக்கும் வீடியோ!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறும் நாள் நெருங்கி வருவதால் தாலிபான்கள் புதிய அமைச்சரவையை உருவாக்கத் தயாராகின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன. தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் அங்கு தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது.  தாலிபான்களின் அடக்குமுறைக்கு பயந்து ஆப்கான் நாட்டினர் அங்கு இருந்து வெளியேறி வேறு நாடுகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஒருவர் தாலிபான்களை பார்த்து பயப்பட வேண்டாம் என்று துப்பாக்கி முனையில் செய்தி வாசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஆப்கானிஸ்தானில் மக்கள் மீதான தாலிபான்களின் அடக்கு முறையை வெளிப்படுத்தும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அதன்வரிசையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தாலிபான்களை பார்த்து பயப்பட வேண்டாம், அவர்கள் தீங்கற்றவர்கள் என ஆப்கன் செய்தி வாசிப்பாளர் ஒருவர் மரண பீதியில் செய்தி வாசிக்க அவர் பின்னால் துப்பாக்கிகளுடன் தாலிபான்கள் நிற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று காபுலில் மற்றொரு தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறிய நிலையில்,  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பலத்த வெடி சத்தம் கேட்டுள்ளது. குவாஜா புகிரா என்ற பகுதியிலிருந்து அதிகமாக புகை வந்தது. காபூல் விமான நிலையத்திற்கு வடக்கு வாயில் அருகிலுள்ள வீட்டை ராக்கெட்டின் மூலம் வெடிக்க வைத்து இருக்கலாம் என்று கருதப்பட்டது.  காபூல் விமான நிலையம் அருகே மீண்டும் தாக்குதல் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்த அடுத்த சில மணி நேரங்களில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More