Home> World
Advertisement

லாவோஸில் அணை உடைந்து 100 பேர் மாயம்; ஐந்தாயிரம் பேர் வீடு இழப்பு

லாவோஸ் அணை உடைந்து விபத்துக்குள்ளானதில் 100-க்கு மேற்ப்பட்டோர் காணாமல் போயுள்ளனர். எத்தனை பேர் பலியாகி உள்ளனர் என்ற விவரம் கூட தெரியவில்லை. 

லாவோஸில் அணை உடைந்து 100 பேர் மாயம்; ஐந்தாயிரம் பேர் வீடு இழப்பு

லாவோஸ் அணை உடைந்து விபத்துக்குள்ளானதில் 100-க்கு மேற்ப்பட்டோர் காணாமல் போயுள்ளனர். எத்தனை பேர் பலியாகி உள்ளனர் என்ற விவரம் கூட தெரியவில்லை. இச்சம்பவம் தாய்லாந்து நாட்டின் தென் கிழக்கு பகுதியில் உள்ள லவோஸ் நடந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தென் கிழக்கு லவோஸ் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. நேற்று (திங்கட்கிழமை) மாலை லவோஸ் நகரில் உள்ள அட்டபியு மாகாணத்தின் சனாக்சே மாவட்டத்தில் அமைந்துள்ள ஹைட்ரோபவர் அணை உடைந்து விபத்துக்குள்ளானது. அணை உடைந்ததால் ஐந்து பில்லியன் கன மீட்டர் நீரை வெளியேறி வெள்ளம் ஏற்பட்டு, அருகில் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் அடுத்து செல்லப்பட்டன. அதில் பலர் மயமாகி உள்ளனர். பலபேர் இறந்திருக்கக் கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. 

ஆயிரம்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அந்த பகுதிகள் முழுவதும் கிட்டத்தட்ட 90 சதவீதம் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. மாகாணத்தில் உள்ள அதிகாரிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் செய்து வருகின்றனர். 

fallbacks

லவோஸ் நாட்டின் பிரதமர் தொங்லோன் சிசோலித் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு, நிவாரண பணிகளை குறித்து கேட்டறிந்து வருகிறார்.

இந்த அணை மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு 2012 ஆம் ஆண்டு கட்டும் பணி தொடங்கியது. இந்த ஆண்டு பணி நிறைவடைந்து, அணையிலிருந்து இருந்தது மின்சாரம் எடுக்க திட்டமிட்டு இருந்தனர். இந்த அணையை கட்டும்பணியில் தாய்லாந்தின் ராட்சபூரி எலக்ட்ரிக்சிட்டி ஹோல்டிங், தென்கொரியாவின் கொரியா வெஸ்டர்ன் பவர் மற்றும் தாய்லாந்தின் லாஸ் ஹோல்டிங் ஸ்டேட் எண்டர்பிரைஸ் ஆகியவை ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் ஆகும் என லாவோஸ் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

Read More