Home> World
Advertisement

இந்தியர்களை அழைத்து வர 24 மணி நேரத்தில் சீனாவுக்கு புறப்படும் விமானம்

கொரோனா வைரஸ் பதற்றத்தால் வுஹானில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. அவர்கள் இரண்டு விமானங்களால் கொண்டு வரப்படுவார்கள்.

இந்தியர்களை அழைத்து வர 24 மணி நேரத்தில் சீனாவுக்கு புறப்படும் விமானம்

பெய்ஜிங்: இந்தியா தனது குடிமக்களை சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து வெளியேற்றத் தயாராகி வருகிறது, அவர்களை நாளை (வெள்ளிக்கிழமை) நாடு திரும்புவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் வுஹான் நகரத்தில் இதுவரை 170 பேர் இறந்துள்ளனர். மேலும் 7,711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர வைரஸ் 17 நாடுகளுக்கு பரவியுள்ளது.

கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்துள்ள மத்திய ஹூபே மாகாணத்திலிருந்து தங்கள் குடிமக்களை அழைத்து வர குறைந்தபட்சம் இரண்டு விமான அனுமதிக்குமாறு இந்தியா சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரி, "வூஹானில் இருந்து இந்திய மக்களை நாளை மாலை விமானத்தில் கொண்டு வர நாங்கள் தயாராகி வருகிறோம்" என்றார்.

இதன்படி, முதல் விமானத்தில் வுஹானிலும் அதன் சுற்றிலும் வசிக்கும் மற்றும் அங்கிருந்து புறப்பட விரும்பும் இந்தியர்கள் ஏற்றிக் கொள்ளப்படுவார்கள். "இதன் பின்னர், ஹூபே மாகாணத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மற்றொரு விமானம் அனுப்பப்படும்" என்று இந்திய தூதரக அதிகாரி கூறினார். 

கொரோனா வைரஸ் காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் 170 ஆக அதிகரித்துள்ளது என்று சீன அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அதேநேரத்தில் புதிதாக 1,700 பேருக்கு இந்த வைரஸ் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

சீனாவில் எந்தவொரு இந்தியரும் பாதித்ததாக உறுதிப்படுத்தவில்லை: MEA
சீனாவில் கொரோனா வைரஸால் எந்தவொரு இந்தியனும் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், வைரஸ் பாதித்த சீனாவின் ஹூபே மாகாணத்தில் வசிக்கும் 600 க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவிஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சீனாவின் ஹூபே மாகாணத்தில் வசிக்கும் இந்தியர்களை நாங்கள் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அவர்கள் இந்தியா திரும்ப விரும்புகிறீர்களா என்று கேட்டோம்." என்றார்.

சீனா அறக்கட்டளை உதவி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் இருக்கிறதா? என்று உன்னிப்பாக கண்காணித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது. இந்த தொற்றுநோயைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துவதில் இந்தியா ஒத்துழைப்பதாகவும் சீன அரசு கூறியுள்ளது. சீன தூதரக செய்தித் தொடர்பாளர் ஜி ரோங், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், புதிய கொரோனா வைரஸ் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் அதைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் சீனாவின் முயற்சிகள் குறித்து தொடர்ந்து அவர்களுக்குத் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Read More