Home> World
Advertisement

பறவைக் காய்ச்சல் பீதி எதிரொலி - 50 லட்சம் கோழிக்குஞ்சுகளை கொல்ல முடிவு

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், 50 லட்சம் கோழிக் குஞ்சுகளை கொல்லப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பறவைக் காய்ச்சல் பீதி எதிரொலி - 50 லட்சம் கோழிக்குஞ்சுகளை கொல்ல முடிவு

கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வரும் நிலையில், பறவைக் காய்ச்சலும் பரவி வருகிறது. அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் வேகம் பன்மடங்காக உள்ளது. இதுதொடர்பான புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு பீதி ஏற்பட்டுள்ளது. மேலும், பறவைக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அனைத்து மாகாணங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளன. அமெரிக்காவின், அயோவா மாகாணத்தில் 5 மில்லியனுக்கும் அதிகமான கோழிக்குஞ்சுகள் கொல்ல முடிவெடுக்கப்பட்டுள்ளது. .

பறவைக் காய்ச்சல் புகார்

அயோவா மாகாணத்தில் உள்ள கோழிப்பண்ணையில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அங்கு 50 லட்சத்துக்கும் அதிகமான குஞ்சுகள் கொல்லப்படும். டி மொயினுக்கு வடமேற்கே 160 மைல் தொலைவில் உள்ள பியூனா விஸ்டா கவுண்டியில் பறவைக் காய்ச்சலின் இரண்டாவது பாசிடிவ் கேஸ் பதிவாகியுள்ளது. 

மேலும் படிக்க | Price of War: தொட்டில்களில் எதிரொலிக்கும் ரஷ்ய படையெடுப்பின் தாக்கங்கள்

53 லட்சம் கோழிக் குஞ்சுகள் 

அங்கு சுமார் 53 லட்சம் கோழிக் குஞ்சுகள் பறவைக் காய்ச்சலுக்கு பாதிக்கபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனால், அந்தப் பண்ணையில் இருக்கும் கோழிக்குஞ்சுகள் அனைத்தையும் கொள்ள அம்மாகாண அரசு முடிவெடுத்துள்ளது. இதுவரை 12.6 மில்லியன் கோழிக் குஞ்சுகள் கொல்லப்பட்டுள்ளன. கோழிகள், கோழிக்குஞ்சுகள் மற்றும் வான் கோழிகளிலும் இதில் அடக்கம். விரைவில் 8 மாகாணங்களில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.  

24 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல்

இதுவரை சுமார் 24 மாகாணங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யயப்பட்டுள்ளது. வலசை வந்த பறவைகள் மூலம் இந்த தொற்று பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது. பறவைக் காய்ச்சலைப் பொறுத்தவரை கடந்த ஓராண்டாகவே ஐரோப்பியா மற்றும் ஆசியக் கண்டங்களில் பரவி வருகிறது. இப்போது அமெரிக்காவில் அதிகளவு பரவத் தொடங்கியிருக்கிறது. 

மேலும் படிக்க | கிர்கிஸ்தானில் பெண்களை கடத்தி திருமணம் செய்யும் அவலம்!

முன்னெச்சரிக்கை

பறவைக் காய்ச்சல் கோழி உட்பட பறவைகள் மற்றும் விலங்குகளை பாதிக்கலாம். இது மனிதர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாது, ஆனால் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள், சில நேரங்களில் ICU-வில் அனுமதிக்கப்பட வேண்டியிருக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More