Home> World
Advertisement

LTTEக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது? இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி கேள்வி! தடை நீங்க வாய்ப்பு!

விடுதலை புலிகள் தடை மீதான மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், ‘விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்து அரசின் தடை தவறானது’ என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

LTTEக்கு ஏன் தடை விதிக்கப்பட்டது?  இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி கேள்வி! தடை நீங்க வாய்ப்பு!

LTTE (Liberation Tigers of Tamil Eelam) இயக்கம் இங்கிலாந்தில் தடை செய்யப்பட்டது. விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான இந்தத் தடையை  எதிர்த்து  ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ (Transnational Government of Tamil Eelam (TGTE)) சார்பில் 2018-ம் ஆண்டு கடிதம் அனுப்பப்பட்டது. 
இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவித்க்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தை அவர் 2019-ம் ஆண்டு நிராகரித்தார். அதன்பிறகு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கைத் தொடர்ந்தது. இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு அணையத்தில் இந்த மேல்முறையீட்டு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், ‘விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்து அரசின் தடை தவறானது’ என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பானது,  இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கலாம் என்று எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக,  2014 ஆம் ஆண்டில், ஐக்கிய ஐரோப்பிய கூட்டமைப்பு, விடுதலை புலிகளின் மீதான தடையை நீக்கியது என்பதை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More