Home> World
Advertisement

ஃபுகுஷிமா கதிரியக்க நீரை கடலில் வெளியேற்ற தொடங்கிய ஜப்பான்... கடல் உணவு இறக்குமதியை தடை செய்த சீனா!

பல்வேறு நாடுகள் தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவித்திருந்த நிலையில், ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை கடலில் வெளியேற்றும் பணியை ஜப்பான் அரசு தொடங்கியது.

ஃபுகுஷிமா கதிரியக்க நீரை கடலில் வெளியேற்ற தொடங்கிய ஜப்பான்... கடல் உணவு இறக்குமதியை தடை செய்த சீனா!

2011 ஆம் ஆண்டு ஜப்பானின் பேரழிவுகரமான நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தின் நீர் அதிக கதிரியக்கப் பொருட்களால் மாசுபட்டது. அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அணு உலைகளை குளிா்விக்கும் இயக்கம் நின்று போனது. அதையடுத்து, அந்த மின் நிலையத்தின் 3 அணு உலைகள் உருகின. அதிலிருந்த கதிரியக்க எரிபொருள்கள் கடலில் கலந்தன. பின்னர் அதனை தடுத்து, பெரிய தொட்டிகளில் அதிகாரிகள் கதிரியக்க நீரை தேக்கி வைத்தனா். தற்போது சுத்திகரிக்கப்பட்ட அந்த நீரை கடலில் கலக்க ஜப்பான் அரசு முடிவு செய்த நிலையில், ஜப்பான் சென்று அந்த நீரை ஆய்வு செய்த ஐ.நா. அணுசக்தி பாதுகாப்பு அமைப்பின் நிபுணா்கள், அதனை கடலில் கலப்பது பாதுகாப்பானதுதான் என்று கூறினா்.

இந்நிலையில், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஃபுகுஷிமா அணு உலையில் தேக்கி வைக்கப்பட்ட கதிரியக்க நீரை சுத்திகரிக்கப்பட்டு கடலில் வெளியேற்றும் பணி வியாழக்கிழமை காலை தொடங்கியுள்ளது.  புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்கக் கழிவுநீரை வெளியிடத் தொடங்கும் டோக்கியோவின் முடிவிற்கு பதிலளிக்கும் விதமாக ஜப்பானில் இருந்து கடல் உணவுகளை இறக்குமதி செய்வதை தடை செய்வதாக சீனா வியாழக்கிழமை அறிவித்தது. ஏற்கனவே இரு அண்டை நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த தடை மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

ஜப்பானின் ஃபுகுஷிமா அணு அசுத்தமான நீர் வெளியேற்றத்தால் ஏற்படும் உணவுகளில் உள்ள கதிரியக்க மாசுபாட்டின் அபாயத்தை அதிகரிக்கும் என்றும், சீன நுகர்வோரின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சுங்கத் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.  கதிரியக்க நீர் மதியம் 1 மணிக்கு வெளியேற தொடங்கியது. அரசுக்கு சொந்தமான மின்சார நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி (TEPCO) இது குறித்து கூறுகையில், நிறுவனம் சுமார் 200 அல்லது 210 கன மீட்டர் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை வெளியேற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறது. வெள்ளிக்கிழமை முதல், தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு 456 கன மீட்டர் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரையும், 17 நாட்களுக்கு மொத்தம் 7,800 கன மீட்டரையும் வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. வெளியேற்றும் உபகரணங்களில் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் நீர்த்த அளவுகளில் ஏதேனும் அசாதாரண நிலைகள் கண்டறியப்பட்டால், நடவடிக்கை உடனடியாக இடைநிறுத்தப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று TEPCO தெரிவித்துள்ளது.வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் சர்வதேச பாதுகாப்புத் தரங்களைச் சந்திப்பதைக் கண்காணிக்கவும் உறுதிப்படுத்தவும் மாதிரிகளைச் சேகரிக்க வியாழன் பிற்பகுதியில் துறைமுகத்திற்கு ஒரு படகை அனுப்பும்.

மேலும் படிக்க | சாதனை படைக்க நிலவில் தரையிறங்கும் சந்திரயான் - 3... நாடு முழுவதிலும் பிரார்த்தனைகள்!

கதிரியக்க தண்ணீரை வெளியிடுவதற்கான திட்டம் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது. 2019 ஆம் ஆண்டில் அதிகாரிகள் எச்சரித்ததால், கதிரியக்க நீரை சேமிக்க இடம் இல்லாத நிலை உள்ளதாகவும், அவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட மற்றும் மிகவும் நீர்த்த வடிவில் வெளியிடுவதைத் தவிர "வேறு வழிகள் இல்லை" எனவும் அணுமின் நிலையை அதிகாரிகள் கூறி வந்தனர். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வெளியேற்றுவது பாதுகாப்பானது என்றும், முடங்கியுள்ள அணுமின் நிலையத்தில் இடத்தை சீர் செய்ய அவசரம் தேவை என்றும் ஜப்பான் வாதிட்டது.

கதிரியக்க நீர் வெளியேற்ற நடவடிக்கையில், அமெரிக்கா ஜப்பானை ஆதரித்துள்ளது. மேலும் வெளியிடப்படும் கதிரியக்க நீரின் அளவு "குறைந்தபட்ச" தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறும் தைவான் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும், சீனா மற்றும் பசிபிக் தீவுகள் தங்கள் எதிர்ப்பில் குரல் கொடுத்தன. கதிரியக்க நீர் வெளியீடு பரந்த வகையில் பிராந்திய மற்றும் சர்வதேச தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், மனித ஆரோக்கியம் மற்றும் கடல் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் என்றும் வாதிட்டது. 

மேலும் படிக்க | Chandrayaan-3: நாளை நிலவில் தரையிறங்கும் சந்திரயான் - 3 விண்கலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More