Home> World
Advertisement

‘டிரம்ப் கொள்கைகள் இல்லாதவர். பொய் கூறும் பழக்கம் உள்ளவர்’ – டிரம்ப் சகோதரியின் கூற்றால் அதிர்ச்சி!!

நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், இது டிரம்ப் மீதான மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகின்றது.

‘டிரம்ப் கொள்கைகள் இல்லாதவர். பொய் கூறும் பழக்கம் உள்ளவர்’ – டிரம்ப் சகோதரியின் கூற்றால் அதிர்ச்சி!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) சகோதரியும், ஓய்வுபெற்ற கூட்டாட்சி நீதிபதியுமான மரியன்னே டிரம்ப் பாரி, வெளியிட்டுள்ள சில கருத்துக்களால் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த வாரம் வெளியிடப்பட்ட ஆடியோ பதிவுகளில், டிரம்பின் சகோதரி அவரை, "கொள்கைகள் இல்லாதவர், பொய் கூறுபவர்" என்று கூறியுள்ளார். நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல்கள் (American Elections) நடக்கவுள்ள நிலையில், இது டிரம்ப் மீதான மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகின்றது.

83 வயதான மரியன்னே டிரம்ப் பாரி (Maryanne Trump Barry), டிரம்பை நேர்மையற்றவர் என்றும் கொடுமைக்காரர் என்றும் கூறியுள்ளார். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் டிரம்பின் சகோதரியுடன் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான உரையாடல்களின் போது அவரது மருமகள் மேரி டிரம்ப் ரகசியமாக பதிவு செய்த நேர்காணல்களில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த பதிவுகளை மேரியிடமிருந்து பெற்ற ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ இந்த தகவல்களை தெரிவித்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனுக்கு (Joe Biden) எதிரான தேர்தலில் ட்ரம்பிற்கு ஆதரவாக செயல்பட குடியரசுக் கட்சியினர் கூட்டவுள்ள சந்திப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர் இந்த ஆடியோ பதிப்புகள் வெளிவந்தன. கடந்த வாரம், முன்னாள் குடியரசுக் கட்சியின் 70 க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் பிடனுக்கு ஆதரவு அளித்தனர். டிரம்ப் ஊழல் நிறைந்த நடத்தைகளில் ஈடுபட்டதாகக் கூறிய அவர்கள், இதனால் அவர் அதிபராக பணியாற்ற தகுதியற்றவர் ஆகிறார் என்று கூறினார்.

டிரம்ப் தனது சகோதரியின் கருத்துக்களை எழுத்துப்பூர்வ அறிக்கையில் நிராகரித்தார்.

ALSO READ: அமெரிக்க அதிபர் Trump தேர்தல் பிரச்சார வீடியோவில் பிரதமர் மோடி..!!!

"ஒவ்வொரு நாளும் இப்படி ஏதாவது ஒன்று வரும்… இதற்கு முகியத்துவம் அளிக்கக்கூடாது" என்று அவர் கூறினார். "நம் நாடு முன்பை விட விரைவில் வலுவாக முன்னேரும்!" என்றும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க டிரம்ப் பாரியை உடனடியாக அணுக முடியவில்லை.

இந்த பதிப்புகளில் சிலவற்றை ராய்ட்டர்சும் பெற்றுள்ளது. 2018 ஆம் ஆண்டு பேரி நீதிபதியாக இருந்தபோது, புலம்பெயர்ந்தோரின் எழுச்சியை சமாளிக்க அவரை எல்லைக்கு அனுப்ப அதிபர் டிரம்ப் முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

"தன்னலம் தான் அவருக்கு அதிகமாக உள்ளது. அவருக்கு எந்தக் கொள்கைகளும் இல்லை.” என்று டிரம்ப் பாரி கூறினார்.

அதிபரின் மருமகளும் பயிற்சியளிக்கப்பட்ட உளவியலாளருமான மேரி டிரம்ப் (Mary Trump) ஜூலை மாதம் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அதில் அவர் டிரம்ப் தன் நலம் மட்டும் பார்ப்பவர் என்றும் சில மருத்துவ கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர் என்றும் உறுதியாகக் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபரின் தந்தையும் மேரி டிரம்பின் தாத்தாவுமான ஃப்ரெட் டிரம்ப் சீனியர் இறந்ததைத் தொடர்ந்து, தனது பரம்பரை சொத்து தொடர்பான சட்ட மோதலின் ஒரு பகுதியாக தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மேரி ட்ரம்ப், இந்த உரையாடல்களை ரெகார்ட் செய்ததாக, மேரி டிரம்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ் பாஸ்டார்டி தெரிவித்துள்ளார். 

ALSO READ: ஹகியா சோபியாவிற்கு பிறகு, கோரா தேவாலயத்தை மசூதியாக மாற்றிய துருக்கி அதிபர்

Read More