Home> World
Advertisement

2 ஆண்டுகள் ஆனாலும் போர் இயந்திரம் ஓயவில்லை! ரஷ்யா மீது புதிதாக 500 தடைகள் விதித்தது அமெரிக்கா!

500 sanctions against Russia : அலெக்ஸி நவால்னியின் சிறைவாசத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மீறுபவர்கள் மீது புதிதாக 500 தடைகளை விதித்த அமெரிக்கா...

2 ஆண்டுகள் ஆனாலும் போர் இயந்திரம் ஓயவில்லை! ரஷ்யா மீது புதிதாக 500 தடைகள் விதித்தது அமெரிக்கா!

உக்ரைன் போர் மற்றும் நவல்னியின் மரணத்தை அடுத்து, ரஷ்யாவின் மீது அமெரிக்கா உலக வரலாற்றில் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை விதிப்பதாக அதிபர் ஜோ பிடன் அறிவித்தார். இது ரஷ்ய பொருளாதாரத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று அறிவித்த புடின், தனது ஆக்கிரமிப்புக்கு மிகப்பெரிய விலை கொடுப்பதை உறுதி செய்வதற்காக ரஷ்யாவிற்கு எதிராக 500 தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ள்ளார்.

அலெக்ஸி நவால்னி மரணம்

ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி அண்மையில் மரணமடைந்தார்.. ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக எதிர்த்து வந்த அவர் சிறை தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும்போது திடீரென மரணமடைந்தது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இப்போது அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் காயங்கள் இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ள நிலையில் இந்த பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

போர் இயந்திரம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை "போர் இயந்திரம்" (war machine) என்று அழைக்கும் அமெரித்த அதிபர், போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், "அலெக்ஸி நவால்னியின் (Alexei Navalny) சிறைவாசத்துடன் தொடர்புடைய நபர்களை" இலக்காகக் கொண்ட பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் புடின் அறிவித்தார்.
 
புதிதாக 500 பொருளாதார தடைகள்

ரஷ்யாவிற்கு எதிராக 500க்கும் மேற்பட்ட பொருளாதார தடைகளை நேற்று (2024 பிப்ரவரி 23 வெள்ளிக்கிழமை) அமெரிக்கா  அறிவித்தது. உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அறிவிக்கப்பட்ட இந்தத் தடைகள், ரஷ்ய அரசை எதிர்த்துவந்த அலெக்ஸி நவால்னி இறந்த பிறகு விதிக்கப்பட்ட தடைகள் ஆகும்.

மேலும் படிக்க | Fraud: பணமோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு 355 மில்லியன் USD அபராதம்!
 
புடினுக்கு அழுத்தம் கொடுக்கும் பிடன்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் "போர் இயந்திரத்தை" நிறுத்துவதற்கு தொடது அழுத்தம் கொடுக்கப் போவதாக கூறும் அமெரிக்க அதிபர், அலெக்ஸி நவால்னியின் சிறைவாசத்துடன் தொடர்புடைய 100 க்கும் மேற்பட்ட "தனிநபர்கள் மற்றும் ரஷ்யாவின் நிதித் துறை, பாதுகாப்பு தொழில்துறை தளம், கொள்முதல் நெட்வொர்க்குகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை மீறுபவர்கள் மீது தடை விதிக்கப்படும்" என்று கூறினார்.

உக்ரைன் போர் மற்றும் அலெக்ஸி நவால்னியின் மரணம் பற்றி குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இந்தப் பொருளாதாரத் தடைகளானது, வெளிநாட்டில்  ஆக்கிரமிப்பு மற்றும் உள்நாட்டில் அடக்குமுறைக்கு புடின் கடுமையான விலையை கொடுப்பதை உறுதி செய்யும் என்று தெரிவித்தார்.   

ரஷ்யாவிற்கு உதவும் ஏறக்குறைய 100 நிறுவனங்களுக்கு கூடுதல் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அமெரிக்கா அமல்படுத்தும் என்றும் ரஷ்யாவின் எரிசக்தி வருவாயை குறைக்கும் நோக்கில் இந்தத் தடைகள் விதிக்கப்படும் என்றும் பிடன் அறிவித்தார்.

"ரஷ்யாவின் போர் இயந்திரத்திற்கு மறைமுக ஆதரவை வழங்கும் ஏறக்குறைய 100 நிறுவனங்களுக்கு புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கிறோம்" என்று பிடன் கூறினார்.

மேலும் படிக்க | $500 மில்லியனுக்கும் அதிகமான கடன்! திவாலாகிறாரா அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்?

ரஷ்யா மீதான தடைகள்
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, அமெரிக்காவும், அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் மாஸ்கோவிற்கு எதிராக பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதன் நிதிச் சொத்துகளைத் தடுப்பது, உயர் தொழில்நுட்ப ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துவது மற்றும் ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியின் விற்பனை விலையில் அதிகாரப்பூர்வ வரம்பை நிர்ணயிப்பது என கட்டுபாடுகள் தொடர்கின்றன.

ரஷ்யாவின் கடுமையான சிறைச்சாலைகளில் ஒன்றானதாக கருதப்படும் ரஷ்யாவின் வடக்கில் தொலைதூரத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையில் நவால்னி அடைக்கப்பட்டார். 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அங்கு அடைக்கப்பட்டிருந்த நவால்னி,சிறையில் வெறும் மூன்று ஆண்டுகள் இருந்த நிலையில் இப்போது இறந்துவிட்டார். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும் நவாலினியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

வியாழன் அன்று (பிப்ரவரி 22) கலிபோர்னியாவில் நவல்னியின் மனைவி யூலியா நவல்னே மற்றும் அவர்களது மகள் தாஷாவை சந்தித்த அமெரிக்க அதிபர் புடின், நவால்னி புடினின் கடுமையான எதிர்ப்பாளர் அசாத்தியமான தைரியம் கொண்டவர்” என்றார்.

அதேபோல, உக்ரைனுக்கு புதிய இராணுவ உதவிக்காக  நாடாளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், "வரலாறு பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த இக்கட்டான தருணத்தில் உக்ரைனுக்கு ஆதரவளிக்கத் தவறியதை வரலாறு மறக்காது" என்று அமெரிக்க அதிபர் அறிவித்தார்.  

மேலும் படிக்க | சிறுதொழில் தொடங்க மானிய வட்டியில் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் தரும் திட்டம்! ஆதார் மட்டும் போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More