Home> World
Advertisement

சண்டை நிறுத்த ஒப்பந்தம்; முடிவுக்கு வருகிறதா இஸ்ரேல்-ஹமாஸ் போர்

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான பிரச்சனை முதல் உலகப் போர் காலத்தில் இருந்தே உள்ளது. இரண்டு நாடுகளுமே ஜெருசலேம் தான் எங்களின் தலைநகர் என்று உரிமை கொண்டாடி வருகிறது. 

சண்டை நிறுத்த ஒப்பந்தம்; முடிவுக்கு வருகிறதா இஸ்ரேல்-ஹமாஸ் போர்

கிழக்கு ஜெருசலேமில், அல்-அக்ஸா மசூதியில், இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேலிய காவல் துறை மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதை அடுத்து காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாலஸ்தீனத்தின் பயங்கரவாத அமைப்பான ஹமாஸ் ஜெருசலேம் நோக்கி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை  வீசியது. ஆனால், இஸ்ரேலின் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பான Iron Dome மூலம் இவை தடுத்து நிறுத்தப்பட்டதால், பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் காசா (Gaza) பகுதியில், இருந்த அல்ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் மற்றும் பிற செய்தி ஊடகங்களின் அலுவலகங்கள் இருந்த மிகப்பெரிய கட்டிடம் தகர்க்கப்பட்டது. 

இஸ்ரேல்-ஹமாஸ் (Israel - Hamas) இடையிலான மோதல்கள் தொடர்ந்து 11 நாட்களுக்கு நடைபெற்று வந்த நிலையில், அது மூன்றாம் உலக்போராக உருவெடுக்குமே என்ற அச்சம் உலகில் நிலவியது. இந்நிலையில், உலகிற்கு ஒரு நிம்மதி அளிக்கு செய்தியாக, வெள்ளிக்கிழமை (மே 21, 2021), இஸ்ரேல்- ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.  இந்த சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden)  காசா பகுதியை சீரமைக்க மனிதாபிமான உதவிகள் அளிக்கப்படும் என உறுதியளித்தார்.

சண்டை நிறுத்த உடன்படிக்கை பற்றிய செய்தி வெளிவந்த சிறிது நேரத்திலேயே ஜோ பிடன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அமெரிக்க அதிபர் இஸ்ரேலின் இரும்பு குவிமாடம் (Iron Dome) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை சீரமைக்கப்படும் என உறுதியளிதார். மேலும், ​​"ஐநா சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் காசாவில் உள்ள மக்களுக்கு சர்வதேச ஆதரவை வழங்குவதற்கும் காசா புனரமைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.

ALSO READ | Jerusalem: மூன்று மதங்களின் புனித இடமாக திகழும் ஜெருசலத்தின் சுவாரஸ்ய வரலாறு

ஐநா தலைமை செயலர் அன்டோனியோ குடரெஸ் (António Guterres )  "இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்தத்தை வரவேற்கிறேன்" என்றும், "11 நாட்கள் நடந்த கடுமையான சண்டையில், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் கூறினார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான பிரச்சனை முதல் உலகப் போர் காலத்தில் இருந்தே உள்ளது. இரண்டு நாடுகளுமே ஜெருசலேம் தான் எங்களின் தலைநகர் என்று உரிமை கொண்டாடி வருகிறது. ஏனெனில், ஜெருசலம் பகுதியை இரு நாடுகளுமே தங்களின் புனித பூமியாக பார்க்கிறது. ஜெருசலேம் மட்டுமின்றி காசா, மேற்கு கரை போன்ற பகுதிகளும் தங்களுக்கு தான் சொந்தம் என இரு நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன.

ALSO READ | ஹமாஸ் ஏவிய ராக்கெடுக்களில் இருந்து இஸ்ரேலை பாதுகாத்த Iron Dome

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Read More