Home> World
Advertisement

ஆப்கானிஸ்தான் பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 27 பேர் கொல்லப்பட்டனர்

ஆப்கானிஸ்தானில் அரசியல் தலைவரின் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 27 பேர் கொல்லப்பட்டனர்

காபூல்: ஆப்கானிஸ்தான் (Afghanistan) தலைநகர் காபூலின் (Kabul) மேற்கு பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த ஷியா தலைவரின் அரசியல் பேரணி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 27 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 52 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் வாகீதுல்லா மேயர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது, பேரணியில் கலந்துக்கொண்ட பல அரசியல்வாதிகள் அங்கும், இங்கும் ஓடி தப்பினர். இவர்களில் நாட்டின் தலைமை நிர்வாகி மற்றும் கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான அப்துல்லா அப்துல்லாவும் (Abdullah Abdullah) அடங்குவார். அருகில் இருந்த கட்டுமான கட்டிடத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் அப்துல்லா அதிர்ஷ்டவசமாக தப்பித்துக்கொண்டார்.

உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி, "ஆப்கானிஸ்தான் சிறப்புப் படைகள் மற்றும் போலீஸ் படைகள் சம்பவ இடத்தை அடைந்துள்ளன" என்றார்.

இதுவரை எந்த அமைப்பும் துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

ஹஸ்ரா சமூகத் தலைவர் அப்துல் அலி மஸ்ரியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த பேரணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சமூகத்தில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் ஷியா இனத்தை சேர்ந்தவர்கள். 

Read More