Home> World
Advertisement

கடலில் தத்தளித்த நாய்க்குட்டியை துணிச்சலாக காப்பாற்றிய நபர்! வைரல் வீடியோ!

கடல் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த  நாய்க்குட்டியை மனம் தாங்காமல் உடனடியாக கடலில் குதித்து  பத்திரமாக மீட்டெடுத்து படகிற்குள் கொண்டு வந்து சேர்த்தார் ஜக்கேப் .

கடலில் தத்தளித்த நாய்க்குட்டியை துணிச்சலாக காப்பாற்றிய நபர்! வைரல் வீடியோ!

வாஷிங்டன் : அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் போர்ட் லாடர்டெய்ல் என்ற கடற்கரை உள்ளது.  அங்கு ஜக்கேப் டூடுயிட் என்பவர் தனது நண்பர்களுடன் நேற்றைய தினம் படகில் உல்லாசமாக பயணம் மேற்கொண்டிருந்தார்.  அப்போது,எதிர்பாராத விதமாக அந்த கடலில் செல்லப்பிராணியான நாய்க்குட்டி ஒன்று கடலில் தவியாய் தவித்து தனியாக தத்தளித்துக் கொண்டிருந்தது.  நாய்க்குட்டியின் தவிப்பைக் கண்ட ஜக்கேப் மனம் தாங்காமல் உடனடியாக கடலில் குதித்தார்.பின்னர் கடல் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த  நாய்க்குட்டியை பத்திரமாக மீட்டெடுத்து ஒருவழியாக படகிற்குள் கொண்டு வந்து சேர்த்தார்.  நீரில் நீண்ட நேரம் இருந்ததால் நாய்க்குட்டி குளிரில் நடுங்கியது.உடனே ஜக்கேப்பின் நண்பர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த நாய்க்குட்டியை தூக்கி ஒரு துணியை வைத்து அதன் உடலை துவட்டி விட்டனர் .

இந்த நாய்க்குட்டி யாருடையதாக இருக்கும்? அந்த நாய்க்குட்டி எப்படி நடுக்கடலுக்கு வந்திருக்கும்? என்பது குறித்த முழு விவரம் தெரியவில்லை.அதனால் நாய்க்குட்டி குறித்த தகவலினை அறிய அது சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த நாய்க்குட்டியின் கழுத்தில் ஒரு பட்டை அணியப்பட்டு இருந்தது.அயில் நாய்க்குட்டியின் உரிமையாளர் யார் என்பது குறித்து விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது.உடனை அவரை தொடர்பு கொண்ட ஜேக்கப் உங்களதை செல்ல நாய்க்குட்டியை நாங்கள் மீட்டு பத்திரமாக வைத்திருக்கிறோம் என்ற தகவலை நாயின் உரிமையாளரிடம் கூறினார்.

fallbacks

உரிமையாளரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து ஜக்கேப் நாய்க்குட்டியுடன் படகில் கரைக்கு திருமாபினார்.பின்னர்,உரிமையாளரிடம் ஜேக்கப் நாய்க்குட்டியை பாதுகாப்பாக ஒப்படைத்துவிட்டு,நாய்க்குட்டி எப்படி நடுகடலுக்குள் மாட்டிக்கொண்டது என்பது குறித்து கேட்டறிந்தார்.  அதாவது உரிமையாளர் தனது குடும்பத்துடன் நாய்க்குட்டியை அழைத்துக்கொண்டு படகில் பயணம் மேற்கொண்டுள்ளார்.அப்போது,எதிர்பாராத விதமாக நாய்க்குட்டி படகிலிருந்து தவறி கடலில் விழுந்துள்ளது.இதனை படகில் இருந்த யாரும் கவனிக்கவில்லை.படகில் பயணித்த உற்சாகத்தில் நாய்க்குட்டியின் மீது கவனம் செலுத்த குடும்பத்தினர் மறந்துவிட்டனர்.

கரை திரும்பியவர்கள் வீட்டிற்கு வந்தபிறகும் நாயுக்குட்டி இருக்கிறதா என்பதை கவனிக்கவில்லை.ஜேக்கப்பின் அழைப்பு வந்த பிறகு நாய்க்குட்டி காணவில்லை என்பதும்,அது இத்தகைய இன்னல்களை எதிர்கொண்டுள்ளது என்பதும் இவர்களுக்கு தெரியவந்துள்ளது.  மேலும், ஜேக்கப் கடலில் தவித்த நாய்க்குட்டியை கடலில் அசால்டாக குதித்து மீட்டெடுத்ததை அவரின் நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூகவலைதளத்தில் பதிவேற்றினர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்ஙளில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் ஜக்கேப்புக்கு பாராட்டுகளையும் பெற்று தந்துள்ளது.

 

Video Credits: Inside Edition

ALSO READ மக்கள் தொகையை அதிகரிக்க சீன அரசாங்கம் மேற்கொள்ளும் வினோத முயற்சி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More